அட்டாளைச்சேனையில் திண்மக்கழிவு பரீட்சாத்தம் 11ஆம் பிரிவு தெரிவு- தவிசாளர் அன்சில்

பைஷல் இஸ்மாயில் -

ள்ளுராட்சி மற்றும் மாகாண அமைச்சு தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள வழங்களை திரட்டி மீள உபயோகித்து உச்சக்கட்ட ஏற்பாட்டினை பிரயோகித்து அதனை அடைந்துகொள்ளும் நோக்குடன் உள்ளுராட்சி நிறுவனங்களின் 3R (குறைத்தல், மீள் பாவனை, மீள் சுழற்சி) செயற்பாட்டு முறைமையினை பின்பற்றவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்திரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

தவிசாளர் சட்டத்திரணி எம்.ஏ.அன்சில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி நிருவனங்களின் 3R செயற்பாட்டு முறைமையினை பரீட்சார்த்த முறையில் மேற்கொள்ளுவதற்கென அட்டாளைச்சேனை 11 ஆம் பிரிவில் உள்ள 200 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு, மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் குறிப்பிட்ட பிரதேசத்தில் சேருகின்ற குப்பை கூழங்களை அகற்றுவதற்கென விஷேட நடைமுறையினை அமுல்படுத்தியுள்ளோம்.

குறிப்பாக வாரத்தின் 2 நாட்கள் அதற்கென தெரிவு செய்யப்பட்டு அந்த இரண்டு நாட்களில், விரைவில் உக்கிப்போகும் குப்பைகளை ஒரு நாளைக்கும் ஞாயிறு தினங்களில் உக்காத குப்பைகளையும் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இப் பிரதேசத்தில் உள்ள அணைத்து இடங்களுக்கும் துண்டுப் பிரசுரம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றினை மீறி கண்ட கண்ட இடங்களில் குப்பை கூழங்களை போடுபவர்களுக்கு எதிராக பிரதேச சபையினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தவிசாளர் அன்ஸில் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :