ஆரிப் சம்சுடீனின் 5வது "வாழ்வின் ஒளி" வாழ்வாதார நிகழ்வும் இப்தார் நிகழ்வும்-படங்கள்



ஏ.ஜி.ஏ.கபூர், சுலைமான் றாபி-

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி அல்-ஹாஜ் ஆரிப் சம்சுடீன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வொன்று (19.07.2014) சனிக்கிழமை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி அல்-ஹாஜ் ஆரிப் சம்சுடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதியாக மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மற்றும் அதிதிகளாக அக்கரைப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்,மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வையின் இணைப்பாளர்.யூ.எல்.உவைஸ், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், மௌலவி எம்.ஆசிக் அலி (காஸிபி) மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் பிரதேச பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அல்-ஹாபிழ் தன்ஸீர் அஹமட்; அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மௌலவி எம்.ஆசிக் அலி (காஸிபி) மார்க்க உபன்னியாஸம (;பயான்) வழங்கினார். ஆதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி அல்-ஹாஜ் ஆரிப் சம்சுடீன் மற்றும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து இப்தார் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :