போர்த்துக்கல் பிரதமர், இலங்கை முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்

கே.சி.எம்.அஸ்ஹர்-

லங்கையில் வர்த்தகத் துறையில் கொடி கட்டிப்பறந்தவர்கள் அரேபிய முஸ்லிம்கள் ஏற்றுமதி ,இறக்குமதி  பொருளாதாரத்தை கையில் வைத்திருந்தவர்களும் இவர்களே. முத்து, இரத்தினம், வாசனை திரவியங்கள், யானைகள்  போன்ற வற்றையும் இவர்களே ஏற்றுமதி செய்தனர்.இவர்களே பணப் பயன்பாட்டையும் இங்கு ஏற்படுத்தியவர்கள்.

இலங்கையின் கரையேரங்களில் வர்த்தக நகர்களை உருவாக்கி தமது குடியிருப்புக்களை அங்கேயே அமைத்துக்  கொண்டனர்.உலகில் பல நாடுகளில் அரேபியர்களின் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொண்ட போர்த்துக்கேயர் அவர்களுக்குப் பின்னால் இங்கு வருகை தந்து தமது ஆயுத பலத்தால் இலங்கையை கைப்பற்றிக் கொண்டனர்.

போர்த்துக்கேயருக்கு எதிராகஅரேபிய முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களோடு இணைந்து போரிட்டனர். கள்ளிக் கோட்டையில் இருந்தும் முஸ்லிம் படை உதவிகளை பெற்றுக் கொடுத்தனர்.அன்றும் இன்றும்  நாட்டை நேசிப்போராக முஸ்லிம்கள் உள்ளனர்.

போத்துக் கேயர் வர்த்தக நகர்களில் இருந்து முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை கொள்ளையிட்டு  தீவைத்தது மட்டுமின்றி கொழும்பு ,காலி போன்ற பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றினர்.இச்சம்பவம் தான் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது பலவந்த  வெளியேற்றமாகும். இன்று ஜனநாயகம் , மனிதவுரிமை எனகோஷமிடும் மேலைத்தேய நாடுகளில் போர்த்துக்கல் உம் ஒன்றாகும்.

இன்று எமது நாட்டிற்கு வருகை தந்துள்ள போர்த்துக்கல்லின் பிரதமர், 'தமது மூதாதையர் செய்த  குற்றத்திற்காக இலங்கை முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்;.பள்ளிவாயல் உடைப்பு , வீடுகள்  உடைப்பு ,கடைகள் கொளi;ளயடிப்பு, கடைகள் எரிப்பு , முஸ்லிம் கொலைகள் யாவும் ஒரு வரலாற்றுப் பதிவே இதை யாராளும் ஒளிக்கவோ ,மறைக்கவோ முடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :