ஜாதியின் பெயரில் அரசியல் செய்பவர்களை கண்ட இடத்தில் சுட்டுத்தள்ள வேண்டும் -பியசேன MP

எம்.ஜே.எம்.சஜீத்-

திருக்கோவில் பிரதேசதிற்க்கு உட்பட்ட ஜே.பி.வீதி, விவேக் வீதி போன்ற வீதிகளை கொங்கிரட் வீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு திருக்கோவில் கிராம அபிவிருத்தி சங்க தலைவன் எஸ்.நன்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பாக இப்பிரதேசம் 2000 வருடம் பழமை வாய்ந்த பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் இவ்வாறான அபிவிருத்திகளை விரும்பாத தீய சக்திகள் எம் மத்தியில் இருக்கின்றனர். தவறான முன் உதாரணங்களை எமது மக்கள் ஒரு போதும் பின்பற்றக்கூடாது. தவரான சினேகிதம் தான் நல்லொழுக்கத்தை கெடுக்கும்.

அமெரிக்காவோ,பிரிட்டேனோ மக்களுக்கு தீர்வை பெற்று தரமுடியாது சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு எவ்வளவு தூரம் எங்களுடைய அபிவிருத்திகளை தங்களுக்காக செய்து கொண்டு இருக்கின்ரோம். ஆனால் இதனை சில தமிழ் மக்கள் விரும்பாததுதான் காரணம்.

அன்மையில் நடைபெற்ற அளுத்கம கலவரத்துக்கு சில தீய சக்கிகள் பின்புலத்தில் இருக்கலாம் என அறியப்படுகின்றோம். எனவே இந்த நேரத்தில் தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஆயுதம் தூக்கியவன் எல்லாம் போராளி தடி எடுத்தவன் எல்லாம் சண்டைக்காரன் ,குரல் கொடுப்பவனும் அறிக்கை விடுபவனும் தான் தலைவன் என்றால் இன்றைய தமிழ் மக்களின் அபிவிருத்தியின் அவல நிலைக்கு காரணம்.

அபிவிருத்தி எப்படி பெற்றுக்கொள்ளலாம் மக்களை ஏமாற்றும் ஜாதி கட்ச்சியை எவ்வாறு புறக்கனிக்கலாம் என்பதை ஏனைய சமூகங்கள் முஸ்லிம் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். தலைவர் மர்ஹும் அஸ்ரப் எவ்வாறு தனது மக்களையும் கட்ச்சியையும் பாதுகாத்து வந்தார் ஆனால் இன்று அந்த கட்ச்சியால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து அதாஉல்லா,ஹிஸ்புல்லா, றிசாட்பதியூதின் போன்ற தலைமைதுவங்களிகன் பின்னால் சென்றுப பாரிய அபிவிருத்திகளை கண்டு கொண்டு வருகிறார்கள். 
மக்களின் நலன்களின் அக்கரையில்லாத வெளிநாட்டு தீய சக்திகளின் வலைப்பின்னலுக்கு சிக்கிக்கொண்டு இருக்கும் டி.என்.ஏ இடம் இருந்து எதையும் சாதித்துக்கொள்ளமுடியாது. புதை குழிக்குள் விழுந்த யானை போலேதான் தாங்களை தாங்களே அழித்துக்கொள்கின்றார்கள்.

 எனவே திருந்திவிட வேண்டும். இல்லையென்றால் திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன இலாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்து என்ன இலாபம் என சொல்லக்கூடிய நிலைமைதான் எமக்கு ஏற்படும்.

இந்த நிலைதான் டி.என்.ஏ வை நம்பி இருக்கும் தமிழ் மக்களுக்கு ஏற்படும். எனவே அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களை பலப்படுத்துவதன் மூலம் கூட்டனிக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும், பிரிட்டெனிற்கும் பதிலடி கொடுப்போம். நாம் அனைவரும் இலங்கை திருநாட்டு மக்கள் ஜாதிக்கோ, ஜாதிக்கட்சிக்கோ இடமில்லை எதிர்காலத்தில் ஜாதிக்கெதிரான துவேசங்களையும் மதங்களுக்கு இடையிலான கலவரத்தை ஏற்படுத்துபவர்களையும் அதைவைத்து அரசியல் செய்பவர்களையும் ஈவிரக்கமின்றி கண்டயிடத்தில் சுட்டுக்கொல்லவேண்டும். அவ்வாறான சட்டம் இந்த நாட்டிலே கொண்டுவரப்படவேண்டும் என நான் விரும்புகின்றேன். என தெரிவித்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :