அமைச்சுக்குல் அத்துமீறி நுழைந்தவர்களை அடையாளம் காண முடியவில்லையாம் – பொலிஸ்


மைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சரவைக்குள் அத்து மீறி நுழைந்த பொது பல சேனாவின் பெளத்த பிக்குகளை தம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தம்மை உத்தியோகபூர்வமற்ற பொலிசார் என அழைத்து வரும் கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவின் முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருக்கும் ஓவொரு அறையையும் சோதனையிட்டனர் அங்கு விஜித தேரர் மறைந்து இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து குறித்த அத்து மீறலை அவர்கள் மேற்கொண்டு இருந்தனர் ,

இந்த அத்துமீறலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன்போது நீதி பதி ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்களை பெற்று நீதி மன்றுக்கு பொலிசார் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் .

இதற்கு அமைய ஆறு ஊடகங்களில் செய்தியாளர்களிடம் இருந்து வீடியோ பதிவுகள் பொலிசாரினால் பெறப்பட்டு ஆராயப் பட்டுள்ளது இந்த நிலையில் பொலிசார் இன்று நீதிமன்றில் ஆஜராகி தம்மால் அந்த வீடியோ பதிவுகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கிராண்ட் பாஸ் மஸ்ஜித் மீது கடும்போக்கு வாதிகள் தாக்குதல் நடாத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிசாரிடம் ஒப்படைத்த போதும் வீடியோவில் இருப்பவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்ற பதிலையே கூரியிருந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.                                                                             lm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :