நான் அதிபர்மார்களுடன் நல்லதுக்குச் சரி கெட்டதுக்குச் சரி சேர்ந்து இருக்கின்றேன்-தயாசிரி ஜயசேகர




இக்பால் அலி-

நான் அதிபர்மார்களுடன் நல்லதுக்குச் சரி கெட்டதுக்குச் சரி சேர்ந்து இருக்கின்றேன். ஜனாபதிக்கு எதிராக விமர்சனம் செய்கின்றனர். கட்சிக்குள் உட்பூசல் இருக்கின்றது. அதனை சரியாக தீர்த்து வைத்தல் வேண்டும். அதுதான் தலைமைத்துவத்தின் சிறந்த இலட்சம் என்று வடமேல் மாகா முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகல் ஸ்ரீ ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தில் 48 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் ஓய்வு அறைக் கட்டிட நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அதிபர் ஏ, ரூபாநாயக்க தலைமையில் இன்று 27-06-2014 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண முதல் அமைச்சது தயாசிரி ஜயசேகர அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
வடமேல் மாகாணத்தில் 31 ஆசிரியர் ஓய்வறைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்தப் பாடசாலையில் ஓய்வறைக் கட்டிடம் நிர்மாணிப்பாப்படுவது ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்காக அல்ல. அடுத்த பாடம் ஆரம்பிக்கப்படும் முன் சரியாக பாடத்திற்கு தயார் நிலையில் செல்வதற்காககும். எமது ஜனாதிபதி கல்வி முறையை மாற்றியமைத்துள்ளார்.

 கலைத்துறையில் 52 விகிதமானவர்கள் தெரிவு செய்யப்படுவதை நாங்கள் அதனை 18 விகிதமாக குறைத்து விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். இந்த மாகாணத்தில் 1246 பாடசாலைகள் உள்ளன. 27000 ஆசிரியர்கள் உள்ளார்கள். கொத்தலாவல குருநாகல் நகரிலுள்ள சிறந்த பாடசாலை. இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு சமன் இந்திரரத்ன பாரியளவிலான சேவைகளைச் செய்துள்ளனர். அவர் செய்த சேவைகளை நாங்கள் கௌரவத்துடன் மதிக்க வேண்டும். 

இப்பாடசாலையின் சம்பவம் ஒன்றுக்காக மாணவி மரணம் எய்தினார். இது ஊடகங்களில் மிகப் பிரபல்யமான செய்தியாகும். இரு ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சில சில செயற்பாட்டின் காரணமாக நானும் மனவேதனைப்பட வேண்டி ஏற்ப்பட்டது. 

நான் ஆசிரியர்களுக்காகவோ அதிபர்களுக்காகவே பணியாற்ற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதிபரிடம் பிழைகள் இருக்க முடியும். பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையொன்று இருக்கிறது. இல்லையெனில் பாடசாலையின் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல முடியாது. நான் பாடசாலையின் அதிபர்களுடன் நல்லதுக்குச் சரி கெட்டதுக்குச் சரி சோந்து இருக்கின்றேன். எந்தப் பிரச்சினையையும் படிப்படியாக சரியாக ஆராய்ந்து உரிய மதிப்பீட்டின் படிதான் மாணவர்களின் நலன் கருதி செயற்பட்டு வருகின்றேன் என்று முதல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதில் தாவரவியல் மற்றும் பெது விநோ விவகார அமைச்சது ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :