திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை? வெங்சர்க்கார்


ங்கிலாந்து அணியை 2 இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
தனது சொந்த கிரிக்கெட் அகாடமிக்காக இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்யும் விழாவில் பேசிய வெங்சர்க்கார், இங்கிலாந்து அணியின் ஆட்டத்தை 2 இன்னின்ங்ஸ்களிலும் ஆட்டமிழக்க செய்தால்தான் வெற்றி பெற முடியும்.

4 பந்து வீச்சாளர்களைத்தான் நாம் தெரிவு செய்வோம், இதில் 2 பவுலர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது அவசியம், இந்த அணியில் அத்தகைய திறமையுடைய பவுலர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ல் 2 டெஸ்ட் போட்டிகள் கடினமாக இருக்கும், ஏனெனில் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் பற்றி நமக்கு ஒன்றும் புரியாது, இந்திய அணி நல்ல தயாரிப்புடன் செல்லவேண்டும்.

மேலும் 2 பயிற்சி ஆட்டங்கள் மிகக் குறைவு, முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன்னர் குறைந்தது 4 அல்லது 5 பயிற்சி ஆட்டங்களாவது வேண்டும்.

கோடையின் ஆரம்பக் கட்டத்தில் இந்தியா அங்கு செல்கிறது. அப்போது பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். இளம் வீரர்கள் அந்தச் சூழலுக்குத் தக்கவாறு விரைவில் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :