வக்பு சபையின் நடவடிக்கைகளை உலமா கட்சி கண்டித்துள்ளது

எஸ்.அஷ்ரப்கான்-

னைத்து மதஸ்தலங்களிலும் ஒலி பெருக்கி பாவனை தடை என்றிருக்கும் போது அதனை செயற்படுத்த அரசை வலியுறுத்தாமல் பள்ளிவாயல்களின் ஒலி பெருக்கிகளை மட்டும் கட்டுப்படுத்த எடுக்கும் வக்பு சபையின் நடவடிக்கைகளை உலமா கட்சி கண்டித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

நாட்டில் எந்த நிகழ்வாக இருப்பினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே ஒலி பெருக்கியை பாவிக்க முடியும் என்பது நீதி மன்ற கட்டளையாக இருக்கின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக எழுந்த வழக்கின் தீர்ப்பின் படி பள்ளிவாயல் பாங்குகளை மட்டுமல்ல அனைத்து மத ஸ்தலங்களும் ஒலி பெருக்கியை வெளியில் கேடம்கும்படி பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கு சாதகமான தீர்ப்பு என்பதை உலமா கட்சி மட்டுமே அன்று கூறியது. ஆனால் முஸ்லிம் காங்கிரசும், சில முடுஸ்லிம் அரசியல்வாதிகளும் இதனை எதிர்த்தனர்.

உண்மையில் பள்ளிவாயல் பாங்கு என்பது சுமார் 3 நிமிடங்களேயாகும்.; பள்ளிக்கு சென்று தொழுவோர் பாங்கு சத்தம் கேட்காவிட்டாலும செல்லத்தான் செய்வர். ஆனால் ஏனைய மதஸ்தலங்களோ விடிய விடிய ஒலி பெருக்கிகளை பாவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் பள்ளிவாயல் பக்கத்தில் தொழுகின்ற வேளைகளிலும் ஒலி பெருக்கிகளை முடுக்கி விடுகிறார்கள். முஸ்லிம்களுக்கு நன்மை தரும் இச்சட்டத்தை புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் எதிர்ப்பை தொடர்ந்து இது விடயத்தை அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.

இப்போது வக்பு சபை பாங்கு மற்றும் முக்கிய அறிவித்தல் தவிர ஏனைய
நிகழ்ச்pகளுக்கு ஒலி பெருக்கியை பாவிக்க கூடாது என சட்டமியற்றுவது
முஸ்லிம்களுக்கு மட்டும் செய்யும் அநியாயமாகும். பள்ளிவாயலில் தொழும்போது வேறு மத ஸ்தலங்களில் ஒலி பெருக்கி சத்தமாக இயங்குவதால் தொழுகை நேரத்திலும் ஒலி பெருக்கியை பாவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தென்னிலங்கையில் உள்ள பல பள்ளிகளுக்கு ஏற்படுகிறது.

ஆகவே வக்கு சபை இத்தகைய அநீதியான சட்டம் கொண்டு வருவதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் முடியுமாயின் நீதி மன்றத்தின் உத்தரவுக்கமைய எந்தவொரு மத ஸ்தலத்திலும் வெளியே கேட்கும் வகையில் ஒலி பெருக்கி பாவனை தடை சட்டத்தை அரசாங்கம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம் என கூறிக்கொள்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :