ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான கிரான் பிரதேச செயலகத்துடன் அலுவலக நடவடிக்கைக்காக தற்காலிகமாக இணைப்புச்செய்யப்பட்டுள்ள 6 கிராம சேவையாளர் பிரிவுகளை புதிதாக அமையவுள்ள கிரான் பிரதேச சபையுடன் இணைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக தற்காலிக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு பொதுமக்களது அபிப்பிராயங்களை கோறியுள்ளதுடன் அறிக்கையினையும் தயார்படுத்திவருகின்றது. இக்கொமிஷனில் இப்பிரதேச நிர்வாகப்பிரிவிற்குற்பட்ட எவ்வித முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படாமை திட்டமிட்ட ஒரு புறக்கனிப்பாக அமைந்துள்ளது.
இக்கிராம சேவகர் பிரிவுகளில் பெரும்பான்மையாக முஸ்லிம்களே காணி உறித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமல் அமையப்பெறும் எத்தகைய தீர்வு முயற்சியும் இனங்களுகிடையே பாறிய விரிசலை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
எனவே இக்குறித்த பிரதேச சபை அமைத்தல் மற்றும் காணி பகிர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் களந்தாலோசிக்கப்படவேண்டும் என்பதுடன் அமைந்துள்ள கொமிஷனில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படக்கோறியும் வழகுத்தாக்கல் செய்யப்படவேண்டும் என்ற ஜுனைட்நளீமியின் கோரிக்கையை ஏற்று ஓட்டமாவடி பிரதேச சபை கொமிஷனுக்கெதிரான வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment