கல்வி பயணத்தில் ஹாஷிம் உமரின் துணை! பல்கலை மாணவர்களுக்கு மடிக் கணனிகள் அன்பளிப்பு!!



அஷ்ரப் ஏ சமட்-
ல்கலைக்கழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, ஹாஷிம் உமர் பௌண்டேசன் மேற்கொண்டு வரும் இலவச மடிக் கணனி வழங்கும் வேலைத்திட்டத்தின் 19ஆம் கட்ட விநியோகம், இன்று (07) கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள பௌண்டேசன் தலைமையகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பௌண்டேசனின் ஸ்தாபகர்  புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் எம்.இஸட். அஹமட் முனவ்வர், சுயாதீன தொலைக்காட்சி தமிழ் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டிரோன் பெர்னாண்டோ, தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஜிப்ரியா இப்ராஹிம், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, பௌண்டேசன் பணிப்பாளர் மரியம், அர்ஹம் சுலைமான் உள்ளிட்டோர், பெற்றோர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், ஆர். அபிக்ஷா – பண்டாரவல, ஆர். நுஸ்னா – பொலன்னறுவ,
எம்.ஜே.எப். ஹப்ஸா – கண்டி, எம்.எம்.எச். பேகம் – புத்தளம், எஸ். பானு – மிஹிந்தலை ஆகிய பல்கலை மாணவிகள், புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிடமிருந்து மடிக் கணினிகளைப் பெற்றுக்கொண்டனர்.


மேலும், இந்நிகழ்வின்போது எழுத்தாளர் அல் ஆலிமா கமருன் நிஷா அஹ்மத் முர்சி எழுதிய “முற்போக்கு தெவிட்டாத தேன் துளிகள்” எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கல்வி, சமூக மேம்பாடு, மனிதாபிமான சேவை போன்ற துறைகளில் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் ஹாஷிம் உமர் பௌண்டேசன், இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.







 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :