தேர்தலை இலக்கு வைத்து கண்டியில் இப்தார்
கஞ்சிக்கோப்பையையும் புரியாணியையும் இலஞ்சமாக கொடுத்து மத்திய மாகாணத்தில் அரசாங்கம் வாக்குகளை பெற முயற்சிக்கிறது.
கடந்த காலங்களில் கொழும்பு அலரி மாளிகையில் ஜனாதிபதியினால் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வு மத்திய மாகாண சபை தேர்தலை இலக்காக கொண்டு இம்முறை கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளது என மேல்மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
உண்மையான சமூக உணர்வுள்ள முஸ்லிம்கள் கண்டியில் ஜனாதிபதியினால் நடத்தப்படும் இப்தார் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும். வெறும் கஞ்சிக் கோப்பைக்கும் புரியாணிக்கும் ஏமாந்து முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்துவிடக்கூடாது.
நாட்டில் இன மத முறுகல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பாக முஸ்லிம்களுக்கொதிரான கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன.
போர்த்துக்கேயர் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவியபோது முஸ்லிம்களுக்கெதிராக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டனர். இதன்போது இலங்கை மன்னர்கள் முஸ்லிம்களை பாதுகாத்தனர்.
அதனையும் மிஞ்சியதாக தற்போது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம்களுக் கொதிரான நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இருபது வருட காலமாக இயங்கி வந்த மஹியங்கனை பள்ளிவாசலை அரசாங்கத்தின் ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் மூடினார். இதன்பிறகு அதனை பள்ளிவாசல் என்று தொழுகையை நடத்த விடாத வகையில் பள்ளிவாசல் காணி உரிமையாளரிடம் கடிதத்தையும் பெற்றுள்ளனர்.
தம்புள்ளை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது. அங்கு வாழும் 25 முஸ்லிம் குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை வாத்துவையில் இறைச்சிக்கடையொன்று தீக்கிரையாக்கப்பட்டது. அண்மையில் தெமட்டகொடையில் இறைச்சி லொரியொன்று தீ வைத்து கொழுத்தப்பட்டது.
இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வாருகின்றன.
ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் பின்னணியில் இருப்பவர்களும் கைதுசெய்யப்படாமல் இருக்கின்றனர்.
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த சம்பவங்கள் ஏற்படாதவாறு தடுப்பதற்கான அக்கறை காட்டவில்லை.
இவ்வாறு முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை கொள்ளாத அரசு மக்களை ஏமாற்ற நிணைக்கிறது.
இதுவரை காலமும் கொழும்பு அலரிமாளிகையில் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடத்துவதற்கு ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
இது மத்திய மாகாண சபை தேர்தலை இலக்காககொண்டே நடத்தப்படுகிறது.
கஞ்சிக் கோப்பையையும் புரியாணியையும் முஸ்லிம்களுக்கு இலஞ்சமாக கொடுத்து வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர்.
நாட்டில் இன்று முஸ்லிம்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் உண்மையான சமூக உணர்வு இருக்குமாயின் இந்த இப்தார் நிகழ்வை புறக்கணிக்கவேண்டும். அதைவிடுத்து இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதென்பது முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.(v.v)
.

0 comments :
Post a Comment