மேற்படி சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விசேட பொதுச் சபைக் கூட்டம் நேற்று (07) சனிக்கிழமை காலை கமு/கமு/சாய்ந்தமருது G.M.M.S வித்தியாலயத்தில், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்-ஹாஜ் யூ.எல்.எம். பெளஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த பணிப்பாளர் சபைத் தெரிவு நிகழ்வு, கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அல்-ஹாஜ் எம்.சி. ஜலால்தீன் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் விபரம்:
உதுமாலெப்பை முஹம்மது ஹனிபா
அப்துல் ரகுமான் அப்துல் மனாப்
அபூபக்கர் முஹம்மது றஸீட்
அப்துல் லத்தீப் அஹ்மத் இபாஸ் அல்ஹம்
முஹம்மது செயின் உம்முல் பைறோஸா
இப்றாலெவ்வை ஜமீலா
கலீலுர்ரஹ்மான் பாத்திமா பர்ஹானா
இவர்களை, சங்கத்தின் பொதுச் சபை உறுப்பினர் அல்-ஹாஜ் வை. அஹமதுலெவ்வை அவர்கள் முன்மொழிந்தார். இதனை கூட்டத்தில் பங்கேற்ற சபையினர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இக் கூட்டத்தில், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் சார்பில், சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களாக இருந்த கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.சி.எம். அஷ்ரப், எம்.எம். நிசாமுத்தீன், எம்.ஏ.எம். அன்வர், மேலும் சங்கத்திற்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ. ஜெகநந்தினி, சிரேஷ்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சரளா ரமேஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு, நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்தத் தெரிவின் மூலம், சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்று, உறுப்பினர்களின் நலனுக்காக சிறப்பான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது.







0 comments :
Post a Comment