பெண்கள் உரிமைகளும் பாதுகாப்பும்!'மனிதன் பிறக்கும்போதே அவனுடன் சேர்ந்து உரிமைகளும் பிறக்கின்றன' என்று சொன்னால் மிகையாகாது. இது விட்டுக்கொடுக்க முடியாத அவர்களுக்கிடையில் பெற வேண்டிய மற்றும் உரித்தானவையாகும்.

இவ்வுரிமைகளும் சுதந்திரங்களுமின்றி மனிதனால் வாழமுடியாது எனக் கருதப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் அனைவருக்கும் சமமாகவும் பிரிக்க முடியாததுமான இம்மனித உரிமைகள், வழக்காற்றுச் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழியாக உறுதிப்படுத்தப்படுகின்றன.

இவ்வகையில் பெண்களின் உரிமையினை எடுத்து நோக்குவோமேயானால் மனிதனின் ஆதிகால சமூதாயமானது பெண்களின் தலைமைத்துவத்தையே கொண்டிருந்து. இதுமட்டுமல்லாது பெண்கள் தெய்வங்களாகவும் போற்றப்பட்டனர்.

ஆனால், மனித நாகரிகம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய பெண்கள் படிப்படியாக ஒதுக்கப்பட்டு வந்தனர். இதனால்தான் பெண்ணியல்வாதிகளின் சிந்தனைகளினாலேயே பெண்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படல் வேண்டும் என்ற எண்ணக்கரு மேலோங்கியது எனலாம்.

இந்நிலையில் பெண்களுக்கெதிரான சில வன்முறைகள் தோனறின. கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொந்தரவு, பெண்களை, இழிவான வியாபாரத்தில் பயன்படுத்தல், பலாத்காரப்படுத்ப்பட்ட விபச்சாரம், தடுப்புக்காவல் மற்றும் யுத்த காலங்களில் கற்பழிப்பு, இனப்பெருக்க உறுப்புகளை சிதைத்தல், சிறுவயது திருமணம், குடும்ப வன்முறைகள், சீதனம் போன்ற இன்னோரென்ன பல விடயங்களில் பெண்கள் பல்வேறு இம்சைகளுக்குள்ளாகின்றனர்.

20ம் நூற்றாண்டில் ஐக்கியநாடு சபையின் தோற்றத்துடன் மனித உரிமைகள் வளர்ச்சியடையத்தொடங்கின. பெண்கள் உரிமைகள் தொடர்பாக கரிசனை ஏற்படத் தொடங்கியது.

UDHR ஆனது பெண்களின் உரிமைகள் தொடர்பாக அத்திவாரமிடக் காரணமாயிற்று. UDHR உறுப்புரை 01 இல் 'மனித பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மசாட்சியையும் இயற்கையாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் சகோதர உணர்வுப்பாங்கில் நடந்து கொள்ள வேண்டும்' என்கிறது.

UDHR உறுப்புறை 02 இல் 'இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயமுடைய தேசிய அல்லது சமூகத்தோற்றம் ஆதனம், பிறப்பு அல்லத பிற அந்தஸ்து போன்ற எத்தகைய வேறுபாடுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள எல்லா உரிமைகளுக்கும் சுதந்நிரங்களுக்கும் எல்லோரும் உரித்துடையவராவர்.'

UDHR பிரிவு 03 இன் படி 'வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் சகலரும் உரித்துடையோராவர்.'

UDHR பிரிவு 07 இன் படி 'எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமுமின்றி சட்டத்தின் முன் சமமானவர்கள். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கும் உரித்துடையவர்களாவர்.' இவைகள் பெண்களின் உரிமைகள் தொடர்பான ஆரம்ப ஆவணங்களாக காணப்படுகின்றன.

ICCPR உறுப்புரை 06 இன் படி 'ஆணுக்கும் பெண்ணுக்குமாக சமநிலையான உரிமையினை அரசு நிச்சயப்படுத்த வேண்டும்' என்கிறது.

ICCPR உறுப்புரை 23 இன் படி 'குடும்பமானது , சமூகத்தினாலும், அரசினாலும் பாதுகாக்கப்பட உரித்துடையது' என ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை 'திருமணத்திலும், திருமண காலத்திலும் மற்றும் அதன் அமைப்பிலும் வாழ்க்கைத்துணைவர்களின் சமமான உரிமைகளை உறுதிப்படுத்த அரசு கடமைப்படுகின்றது' என்கிறது. இங்கு திருமண வயதில் ஆள்சார் சட்டங்களில் வயது வித்தியாசம் காணப்படுகின்றது.

ஐஊநுளுஊசு உறுப்புரை 03 இல் 'பொருளாததார சமூகப் பண்பாட்டு உரிமைகளையும் ஆராய்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமையினை உறுதிப்படுத்துகின்றது.'

ICESCR உறுப்புரை (7) (அ) (1) இற்கமைய 'ஆண்களின் ஆளப்படுகின்ற வேலை நிபந்தனைகளிலும் பார்க்க குறைந்தளவான வேலை நிகந்தனைகளுக்கு பெண்கள் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்'. ஐஊநுளுஊசு உறுப்புரை (13) (2) (10) (1) 'கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்' என்பதை குறிப்பிடுகின்றது.

அந்த அடிப்படையில் 1980 களில் தான் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் அழித்தொழிக்கப்படல் வேண்டும் என்ற கரிசனையும் ஏற்பட்டது. இது பெண்களின் உரிமைகள் தொடர்பான பிணக்கும் இரண்டு அம்சங்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டது.

1. பெண்களுக்கெதிரான ஓரம்கட்டுதல்கள் நிறுத்தப்படுதல் வேண்டு;ம்.

2. பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படுதல் வேண்டும்.


இந்த அடிப்படையில் CEDAW 1981 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச்சமவாயமானது எவை பெண்களுக்கெதிரான பாரபட்சங்களாக கொள்ளப்பட வேண்டும்ளூ அத்தகைய பாரபட்சங்களை அகற்றுவதற்குஎடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்று இரு விடயங்களையும் விரிவாக விளங்குவதன மூலம் அதனை அனேகமாகப் பெண்கள் உரிமைகளுக்கான சர்வதேச சட்டமூலம் என சிறப்பாக விபரிக்கின்றது. இச்சமவாயமானது ஆறு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது.

பகுதி - Iல் உறுப்புரை 01 முதல் 06 வரை பெண்களுக்கெதிரான பாரபட்சத்தின் வரைவிலக்கணத்தை உள்ளடக்கியுள்ளது.

பகுதி - IIல் உறுப்புரை 07 முதல் 09 வரை அரசியல் மற்றும் பொது வாழ்வில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான அரசுகளின் கடப்பாடுகளையும் உள்ளடக்குகின்றது.

பகுதி – IIIல் உறுப்புரை 10 முதல் 14 வரை கல்வி, தொழில் வாய்ப்பு, உடல் நலம், பொருளாதார, சமூக, கலாசார வாழ்வு போன்ற துறைகளில் பெண்களுக்கு எதிரான பாரபட்சங்கள் அகற்றுவது தாடர்பான முன்னேற்பாடுகளை கொண்டுள்ளது. மேலும் இப்பகுதி கிராமிய பெண்களின் விசேட பிரச்சினைகள் தொடர்பாக அரசுகளின் கடப்பாடுகளையும் உள்ளடக்குகின்றது.

பகுதி – IIV ஏன் 15ம் 16ம் உறுப்புரைகள் பெண்களின் உரிமைகள் மற்றும் விவாகம், குடும்பவியல் சட்டம் என்பவற்றை செயற்படுத்துகையில் சட்டத்திற்கு முன் ஆண்களுடன் பெண்கள் சமம் என்ற நிலையை அடைந்துகொள்வது தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

வியட்னாமில் 1993ல் நடைபெற்ற மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் உலகமாநாடு பெண்களால் தமது உரிமைகளுக்காக நடத்திய போராட்டம் ஒரு தேசிய மைக்கல் எனலாம். இம்மாநாட்டிற்கு முன்னரும் அது நடந்த வேளையிலும் பெண்கள் முன்னொரு பொழுதும் கண்டிராத விதத்தில் தமது சக்திகளை ஒருங்கிணைத்ததனால் சர்வதேச சமூகம் பின்வருமாறு கூறியுள்ளது.
'பெண்களினதும் பெண்பிள்ளைகளினதும் மனித உரிமைகள் பராதீனப்படுத்த முடியாத உள்ளார்ந்த மற்றும்பிரிக்க முடியாத அனைத்துலக மனித உரிமைகளின் ஒரு சக்தியாகும்.'

UN பொதுச்கபைகளினால் 1999 ஆம் ஆண்டு Optinal Protocol to the CEDAW அங்கீகரிக்கப்பட்டு 2000 ஆண்டு அமுலாகி வந்தது. இலங்கை 2002 ஆம் ஆண்டு பின்னுறுதிப்படுத்தியது. இதன் கீழான ஏற்பாடுகள் இலங்கை பிரஜைகளுக்கும் ஏற்புடையதாகும்.

சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட உரிமைகள் அரச தரப்பினால் மீறப்படுகையில் பாதிக்கப்பட்டவர் அல்லது அவர் சார்பில் தனிப்பட்டவர் அல்லது அவர்களின் குழு தனது ஊழஅஅவைவநநக்கு அறிவிக்கலாம். அத்தகைய அறிவிப்பு எவரேனும் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் குறித்த பாதிக்கப்பட்டவரின் சம்மதம் பெறப்படல் வேண்டும் அல்லது அதை நியாயப்படுத்த வேண்டும். அனோமோதய அறிவிப்புக்கள் கருத்தில் கொள்ளப்படாது.

ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தொழில் சட்டங்கள் பெண்கள் ஆபத்தான தொழில் செய்வதிலிருந்து பாதுகாப்பு வழங்கும் நோக்குடுனேயே உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் இது பெண்கள் பொருளாதார ரீதில் முன்னேறுவதற்கு ஒரு தடையாக காணப்படுகிறது.

இவ்வாறு பெண்களைப் பாதுகாப்பது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீதிமன்றினூடாக வழக்குத் தொடுதல் மற்றும் தீர்ப்புகளைப் பெறுதல் என்பன குறைந்தனவாகவே காணப்படுகிறது.

பெண்கள் தொடர்பான தொழிற்சட்டங்கள்

அரசியலமைப்பில்:

§ உறுப்புரை (1) (2) பால் ரீதியான பாரபட்சம் காட்டப்பட இயலாது என்பதனூடாக பெண்கள் ஆண்களுக்கு சமமாக தொழில் செய்வதை உறுதிப்படுத்துகின்றது.

§ 1933ம் ஆண்டின் Sex Disqualification Removal (Legal profession) Ordinance ஊடாக பெண்கள் எந்த தொழிலிலும் இணைவதற்கு சட்டரீதியான உரிமைகள் கொண்டுள்ளனர். எனினும் அரசியலமைப்பினூடாக பால்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளி ஒருவருக்கு உயர் நீதிமன்றில் நிவாரனம் பெறுவதில் சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. குறிப்பாக அரச உத்தியோகத்தர்களால் அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்குமாயின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கமைய உயர்நீதிமன்றில் நிவாரணம் பெறமுடியும். எனினும் தனியாருக்கு எதிராக இவ்வேற்பாட்டின்படி நிவாரணம் பெற முடியாது. மேலும் உறுப்புரை 16(1) ன் பிரகாரம் பழைய சட்டங்களை உயர்நீதி மன்றினால் கேள்விக்குட்படுத்த முடியாது.

§ மேலும் உறுப்புரை 12(4) பிரகாரம் பெண்களின் நலனுக்காக உருவாக்கும் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்த முடியாது. உறுப்புரை 12(3) ன் பிரகாரம் சட்டம் ஒன்று உருவாக்கப்படும் போது அதில் பாரபட்சம் காணப்படுமானால் பாராளுமன்றினூடாக அதனைக் கேள்விக்குட்படுத்தலாம். அரச துறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொழிலில் எந்தவித பாரபட்சமும் காணப்படுமானால் பாராளுமன்றினூடாக அதனை கேள்விக்குட்படுத்தலாம்.

§ அரச துறையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தொழிலில் எந்தவித பாரபட்சமும் காணப்படவில்லை. எனினும் தனியார் துறையில் பெண்களுக்கு சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. அரசியல் அமைப்பு இதற்கு எந்த நிவாரணத்தையும் இதுவரை வழங்கவில்லை.

ஏனைய சட்டக்கட்டுப்பாடுகள் :

பெண் தொழிலாளர்கள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 3 வகைகளாகக் காணப்படுகின்றன.

Ø பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள்

Ø தொழில் நிபந்தனைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கான சட்ட ஏற்பாடுகள்

Ø தொழிலாளர் சுகாதாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள்.

பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள்

§ 1923 ம் ஆண்டின் EWYC Ordinance இது பெண்களை குறிப்பிட்ட சில தொழில்களில் ஈடுபடுத்துவதற்கான மட்டுப்பாடுகளை விதிக்கின்றது. நுஓ-சுரங்கத் தொழில், இரவு நேரக்கடமை

§ 1937 ம் ஆண்டின் Employment of Female in Mines Ordinance இது பொதுவாக பெண்களை நிலத்திற்குக் கீழே வேலை செய்வதைத் தடுக்கிறது.

§ Factories Ordinance 1942 தொழிற்சாலைகளில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவைளை கட்டுப்படுத்துகின்றது. Sec 14.2(டி) (III)

§ 1979 ம் ஆண்டின் CEDAW வில் இலங்கை 1981 ல் அங்கத்தவராக இணைந்தது. இதனூடாக பெண்களுக்கும் சமமான தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1984 ILO Convention இல் கூறப்பட்ட பெண்கள் இரவு நேரக்கடையில் ஈடுபடுவதனைத் தடுக்கும் ஏற்பாட்டினை இல்லாமல் செய்யப்பட்டது. இது 1984 ம் ஆண்டின் 32ம் இலக்க தடைச்சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகும். எல்லாப் பெண்களும் இரவு 6.00 மணிமுதல் 8.00 மணி வரையிலும் கடையிலும் அலுவலகங்களிலும் வேலை செய்ய முடியும். 1984 ம் ஆண்டின் 32 ம் இலக்க Night Work act இன் பிரகாரம் எந்தவொரு தொழில் வழங்குனரும் பெண் தொழிலாளர்களை இரவுநேரக் கடமையில் ஈடுபடக் கட்டாயப்படுத்த முடியாது.

தொழில் நிபந்தனைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கான சட்ட ஏற்பாடுகளும்

§ 1941 ம் ஆண்டின் Wages Board Ordinance உருவாக்கப்பட்டு சம்பள அளவுத்திட்டங்களில் Skills Labour, Un Skills Labour, Factory Workers போனற் தொழில்களின் அடிபபடையில் சம்பள க் கட்டமைப்பினை உருவாக்கியது. எனினும் 1984 ம் ஆண்டிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சம்பளம் பெருந்தோட்டத்துறையில் ஏற்படுத்தப்பட்டது.

§ EPF Act 1958 இன் பிகாரம் ஆண்களைவிடப் பெண்கள் முன்னரே தங்களுடைய EPF Claim இனைப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்வாறு இருப்பினும் வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் பெண்கள் தொடர்பாக சட்டம் போதுமானளவு ஏற்படுத்தப்படவில்லை.

§ முதன் முதலாக 1865 ம் ஆண்டில் ளுநசஎiஉந ஊழவெசயஉவ ழுசனiயெnஉந மூலமாக ஒரு மாத முன்னறிவித்தல் அல்லது ஒரு மாத சம்பளத்தைச் செலுத்துதல் எனும் பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது. எனினும் சேவை நிபந்தனைகள், விடுமுறை, சமூக பாதுகாப்பு, ஓய்வூதியச் சலுகைகள் போன்ற எதுவும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு சட்டரீதியாக இல்லாமை பாரிய குறைபாடாகக் காணப்படுகின்றது.

தொழிலாளர் சுகாதாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள்.

§ 1942 ம் ஆண்டின் Factories Ordinance ஆனது காலணித்துவ ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பெண் தொழிலாளர்கள் தொடர்பான வேலை நேரம் மற்றும் OT தொடர்பான பிரதான சட்டமாகும் மற்றும் இச்சட்டமானது தொழில் வழங்குனர், தொழிற்சாலைகளில் சுகாதாரம் தொடர்பான தராதரங்களைப் பேணுவதையும் வலியுறுத்துகின்றது.

§ முதன் முதலாக முகாமைத்துவ தரத்திலுள்ளவர்களுக்கும் White Collar Job செய்பவர்களுக்கும் அவர்களது நலனோம்பு தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டது The Shop Act -1954 வினாலாகும்.

§ 1976 ம் ஆண்டு Factory Ordinance ற்கு கொண்டுவரப்பட்ட திருத்தமானது இலகுவில் பாதிப்படையக்கூடிய மனித உடல் அங்கங்களான கண், காது, மற்றும் ஒலி, மாசடைதல், கதிர்வீச்சு, அதிர்வு, வாயு போன்றவற்றிலிருந்தும் பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. (Sec 51 (A), 53, 53(A), 58(A)

§ Sec 99 ன் பிரகாரம் சட்டத்தின் திருத்தமானது கைத்தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்கும் சபைகளை உருவாக்குதல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

§ சாதாரணமாக ஒரு தொழிலாளி தனக்கு ஏற்பட்ட காயத்துக்கு தீங்கியல் சட்டத்துக்கூடாக சாதாரண நடைமுறையில் நட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்

§ இதற்கு மேலதிகமாக நீதிமன்றம் ஊடாகச் செல்லாமல் Workman's Compensation என்ற கொள்கை உருவாக்கப்பட்டு நிவாரணம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கொள்கையானது Workman's Compensation Ordinance 1934 என்ற சட்டதத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் நிவாரணம் மிக செற்பமாகக் காணப்படுகின்றது. நிரந்தர ஊனம் அல்லது இறப்பிற்கும் கூட மிகக் குறைந்தளவே நிவாரணம் வழங்கப்பட்டது.

வேலையிடத்தில் ஏற்படும் வன்முறைகள்

§ அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் தொழிலாளர்களுக்கு எதிரான செயல்களுக்காக அடிப்படையுரிமை மீறல் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை தனியார் நிறுவனங்களில் ஏற்படும் இவ்வாறான நடத்தைகளுக்கு எவ்வாறு நிவாரணம் வழங்கலாம் என்ற வினா எழுப்பப்படுகின்றது.

சட்டக் கட்டுப்பாடும் சட்டத்தை அமுல்படுத்தலும்

§ பெண்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது நியாயமானதும் சமத்துவமானதுமான நியாயாதிக்கத்தைப் பெண்களுக்கு நியாயம் வழங்குவதற்கு நீதிமன்றங்கள் கையாண்டுள்ளன. (CWC Vs Superintendent Rebury Estate)

§ மேலும் உயர் நீதிமன்றம் தொழிலானது நிரந்தரமானதா அல்லது அமைய அடிப்படையிலானதா என்பதனை ஆராயும் போது அமையத் தொழிலாளர்களும் சட்டத்தின் கீழ் தொழிலாளர் உரிமைகள் பெற நீதிமன்ற தீர்ப்புகள் உதவி செய்துள்ளன.

§ Labour Commissioner அலுவலகத்தில் பெண்களுக்கென தனியான பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு பெண்களின் தொழில் தொடர்பான வேலைகளைக் கண்காணிக்கப்படுகின்றது.

§ ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சம்பளத்தை வழங்குவதற்கு மேற்படி பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

§ கயிறு திரித்தல், கல்லுடைத்தலில் ஈடுபடும் பெண்களுக்குரிய சம்பளம், ஏனைய Benfits இன்னும் தீமானிக்கப்படவில்லை. .

சர்வதேச மகளீர் தினம் சுருக்கமாக IWUD என்றும் அழைக்கப்படுகின்றது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து ஐக்கியநாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த நிகழ்வாக மாறியது. மகளீர் தினம் 1911ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே, இவ்வாண்டு 2024 மார்ச் 08, இன்று கொண்டாடப்படும் மகளீர் தினத்தில் ஊதா நிறம் நீதி மற்றும் கண்ணியத்தையும் , பச்சை நிறம் நம்பிக்கையையும் , வெள்ளை தூய்மையையும் பிரதிபலிக்கிறது.

சமூக சீர்திருத்தம், மகளீர் மேம்பாடு, நல்லிணக்கம், மொழித்தொண்டாற்றல், கலை, அறிவியல், மேம்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வெறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு '024ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது' (08.03.2024) இன்று இந்தியாவில் மான்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே, எமது பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புக்கள் என்பவற்றைப் பயன்படுத்தி எமது நாட்டின் அபிவிருத்தி பாதைக்கு கை கொடுக்க வேண்டும்.

எனவே, இன வேறுபாடின்றி சுதந்திரமாக பாரபட்சம் காட்டாது சமத்துவத்துடன் சமமான உரிமைகள், நேர முகாமை, கல்வி மற்றும் வியாபாரம் என அரசியல், பொருளாதார, சமூக, கலாசார,பண்பாடு ரீதியாக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் சகல மக்களுடனும் இணக்கப்பாட்டுடன் வாழ்வதற்கும் இம் மகளீர் தினத்தில் எமக்களித்த உரிமைகளையும் பாதுகாப்பையும் உயிரூட்டி சக்தி நிறைந்த பலமாக மகளீர் ஒன்றுபட்டு வாழ்வோம்.


தொகுப்பாக்கம்

எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா
அதிபர்
கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயம்.
B.Ed(Hons.) ,M.Ed , PGDEM (Merit) , LLB final year,Diploma in journalism(reading)-seusl
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :