இந்த சட்டமூலம் கடந்த ஜனவரி 23ஆம் திகதி, திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலமாகும்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2025 நவம்பர் 21ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமானவரால் 2025 டிசம்பர் 3ஆம் திகதி முதலாவது வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் மூலம், பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர்களைத் தெரிவு செய்தல், அவர்களின் பதவிக்கால வரையறைகள், பதவியிலிருந்து நீக்குதல் ஆகியவற்றுக்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, கற்கைப் பகுதி தலைவர்களை நியமிப்பதற்கும், அவர்களைப் பதவியிலிருந்து அகற்றுவதற்குமான தெளிவான வழிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இந்த சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.

0 comments :
Post a Comment