பாவங்கள் அழித்திடுவாய்
பாவிகள் ஒழித்திடுவாய்
பண்புகள் காட்டிடுவாய்
பாங்காய் வந்திடுவாய்
புனித ரமலானே.....
வறுமைகளை போக்கிடுவாய்
வங்குரோத்தை நீக்கிடுவாய்
வாலிபத்தை காத்திடுவாய்
வழிகளை காட்டிடுவாய்
புனித ரமலானே .....
சுவனத்தை தந்திடுவாய்
சுகத்தினை தந்திடுவாய்
சுயத்தினை காத்திடுவாய்
சுயநலம் போக்கிடுவாய்
புனித ரமலானே ....
வீண் பேச்சை தடுத்திடுவாய்
வீண் விரயம் தடுத்திடுவாய்
வீண் வம்பை தடுத்திடுவாய்
வீண் போகாமல் காத்திடுவாய்
புனித ரமலானே.....
தர்மங்கள் ஓங்கச்செய்து
தரித்திரியம் போக்கச்செய்து
தவருகள் கலையச்செய்து
தங்கலைக் காத்திடுவாய்
புனித ரமலானே.....
நண்மைகள் அல்லித்தந்து
நரகத்தை தல்லிவைத்து
நற்கருமங்கள் சொல்லித்தந்து
நண்மையை யேவிடுவாய்
புனித ரமலானே.....
ரமலானை வரவேற்போம்
ரப்புவிடம் வரம் கேற்போம்
ரஹ்மத்தை பெற்றிடுவோம்
ரப்பல் ஆலமீனை தொலுதிடுவோம்
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....
இப்படிக்கு
கபித்தீபம்
றிஸ்லி சம்சாட்.
