கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களின் சூதாட்டம் படமாக தயாராகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்களும், இடைத்தரகர்களும் கைதாகி உள்ளனர். இந்தநிலையில் இந்த கிரிக்கெட் சூதாட்டங்களை வைத்து திரையுலகினரும் கல்லாக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகி வருகின்றது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ரோஸ் வெங்கடேசன் இயக்குகிறார்.

இவரே கதாநாயகியாகவும் நடிக்கிறார். நாயகனாக கிஷன் ராமச்சந்திரன் நடிக்கிறார். பாரதி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து ரோஸ் வெங்கடேசன் கூறுகையில்...

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தரகர்களின் சூதாட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூதாட்டத்ததை மையமாக வைத்து ´கிரிக்கெட் ஸ்கேண்டல்´ படம் தயாராகிறது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கோடிக்கணக்கான பணம் புரள்கிறது. இதில் ஈடுபடும் சில தரகர்கள் பற்றிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து இப்படத்தை எடுக்கிறேன். கிரிக்கெட் சூதாட்டம் மட்டுமின்றி திருநங்கைகள் சமூகத்தில் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதும் படத்தில் இருக்கும். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது.

மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். நிச்சயம் இப்படத்தை வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்துக்கு தீபன் இசையமைக்கிறார். அகுஅஜ்மல் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :