எங்களுடைய வேலை நிறுத்த போராட்டம் வெற்றி என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

3.5 சதவீதமான அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளித்ததாகவும் இது சாதாரண சராசரி வருகையை விட 3.5 சதவீதம் அதிகம் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள அதே வேளை இன்றைய வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய தொழிற்சங்க நிலைய தலைவர் K.D. லால் காந்த தகவல் தெரிவிக்கையில் அரச ஊழியர்கள் மீது அரசினால் பல கண்டிப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது என தெரிவித்தார். அத்துடன் அதிகமான தனியார் பிரிவு தொழிலாளர்களும் இன்று வேலைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்று பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு இந்த வேலை நிறுத்த நடவடிக்கை அரசின் முட்டுக்கட்டைகளுக்கு மத்தியிலும் வெற்றியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 200 தனியார் கம்பனிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாகவும் அதிக எண்ணிக்கையான தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதராவாக நடவடிக்கைகளை நிறுத்தி இருந்ததாகவும் வேலை நிறுத்த கூட்டமைப்பு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரசு தனது அதிகாரங்களை பாவித்து வேலை நிறுத்த போராட்டத்தை ஒடுக்க முனைந்ததாக அவர் கூறினார்.

சில அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்று வேலைக்கு சமூகமளித்தல் கட்டாயம் என ஊழியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சமரசிங்க மேலும் தெரிவிக்கையில் அரச பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் அதிகளவான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் ஏனைய அரச ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு சிலர் தமது இடங்களில் கறுப்பு கொடிகளையும் ஏற்றியதாக கூறினார்.

இதேவேளை லால் காந்த மேலும் தகவல் தருகையில் வெசாக் விடுமுறையின் பின் வேலை நிறுத்த போராட்டம் மீண்டும் தொடரும் எனவும் மின்சார கட்டண உயர்வு நீக்கப்படும் வரை அந்த வேலை நிறுத்தம் தொடரும் எனவும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :