அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.உடுநுவர பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது;
‘அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு மாற்ற முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில், ஸ்திரமான ஒரு அரசாங்கத்துடன் இருந்து எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவதே எமது தேவையாக இருந்தது. ஆயினும், தேவையான நேரத்தில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் இடம்பெற்றால் அது தொடர்பில் விமர்சிப்பதற்கான சுதந்திரம் இந்த அரசாங்கத்தினுள் எமக்குள்ளது.
ஆயினும், அதனூடாக ஒரு சில சக்திகள் எதிர்பார்க்கும் விடயங்கள் இடம்பெறாவிடின் அந்த சக்திகள் எம்மைப் பற்றி பல்வேறு வதந்திகளைப் பரப்புவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது,’ என்றார் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்.

0 comments :
Post a Comment