அமெரிக்காவின் – அரிசோனாவில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் மின்சார மற்றும் இயந்திர சாதன உற்பத்தியில் புதிய உற்பத்திக்கான பரிசினை அநுராதபுரம் மிஹிந்தலை மகா வித்தியாலயத்தின் மாணவன் புபுது கபுகே சுவீகரித்துள்ளார்.வயல் வரப்புகளை அமைப்பதற்கான இயந்திரத்தை தயாரித்தமைக்காகவே இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற பரிசு வழங்கும் நிகழ்வில் இந்த இயந்திரத்தை தயாரித்தமைக்காக அவருக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு விருது வழங்கும் விழாவிலும் கபுகேவின் இந்த படைப்பிற்கு விருது வழங்கப்பட்டது.
இம்முறை நடைபெற்ற இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியில் 60 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பேர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment