பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் வெளியேற வேண்டும் -நவாஸ் செரீப்.

மீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற ஜூன் 2-ந் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்.

பின்னர் அதிபர் ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்த நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார்.

தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவரது கனவு பலிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட அவருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

மேலும் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கைதாகி சிறை காவலில் உள்ளார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து பாகிஸ்தானில் இருப்பது நவாஸ் செரீப்புக்கு பிடிக்கவில்லை. எனவே, தான் பிரதமர் பதவி ஏற்கும் முன் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு கடத்துவது குறித்த தனது முடிவை சமீபத்தில் தன்னை சந்தித்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அஷ்பாப் பர்வேஸ் கயானி முலம் முஷரப்பிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :