சிங்கள மக்களை விடவும் சிறந்த மனிதர்கள் உலகில் யார் இருக்கிறார்கள்-அஸ்வர்

சிங்கள மக்களை விடவும் சிறந்த மனிதர்களை உலகில் எங்கும் பார்க்க முடியாது. அவர்கள் மிகவும் கருணையானவர்கள் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், வெசாக் பௌர்ணமி காலத்தில் வீதியில் செல்லும் மக்களுக்கு பல்வேறு உணவு பாணங்களை வழங்கி வருதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களின் வாழ்க்கை முறைமையில் முக்கியமானதாக தாணங்களை (தன்சல்) கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன மத பேதங்களை கருத்திற் கொள்ளாது வீதியில் செல்லும் அனைவருக்கும் இதய சுத்தியுடன் சிங்கள பௌத்தர்கள் தங்களால் இயன்றதை வழங்கி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :