கட்டாரில் நடைபெற்ற இலங்கையர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச அணிக்கு சாம்பியன் கிண்ணம்!



ட்டார் தலைநகர் தோஹாவில் வசிக்கும் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் வகையில், இலங்கையின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற சிலோன் அசோசியேஷன் கப் – கட்டார் சீசன் 02 கிரிக்கெட் சுற்றுப் போட்டி மிக விமரிசையாக நடைபெற்று நிறைவடைந்தது.

பரகஹதெனிய அமைப்பினரின் ஏற்பாட்டில், தோஹா ஐடிஎல் (ITL) மைதானத்தில் இவ்வாரம் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் அடங்கிய 16 க்கு மேற்பட்ட அணிகள் உற்சாகமாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சுற்றுப் போட்டியின் ஆரம்ப கட்டப் போட்டிகள் சிறப்பாக நடைபெற, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதிப் போட்டிகளுக்கு
கிண்ணியா பிரதேச அணி மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச அணி ஆகியவை தகுதி பெற்றிருந்தன. இரு அணிகளும் தங்களது திறமையான ஆட்டத்தால் பார்வையாளர்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.

மேலும், இந்த கிரிக்கெட் போட்டி வெறும் விளையாட்டு நிகழ்வாக மட்டுமல்லாது, நாட்டில் அனர்த்தங்களாலும் பல்வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் மனிதாபிமான நோக்கத்துடனும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் நிதி, அந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிய இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை பிரதேச அணி சிறப்பான அணித் திறன், ஒழுங்கமைந்த பந்துவீச்சு மற்றும் வலுவான துடுப்பாட்டத்தைக் காட்டி, கிண்ணியா பிரதேச அணியினரைத் தோற்கடித்து வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

வெற்றியைத் தொடர்ந்து, அட்டாளைச்சேனை அணியினருக்கு கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் ஏற்பாட்டாளர்கள் தங்களது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இந்த போட்டி, கட்டாரில் வாழும் இலங்கையர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் விளையாட்டு மனப்பான்மையை மேலும் வலுப்படுத்திய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :