.jpg)
சிங்கள ராவய அமைப்பினரால் கொள்ளுப்பிட்டியில் இறைச்சி கடையொன்று தாக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சகோதர இணையத்துக்குத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சிங்கள ராவய கொழும்பு பொறளை பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக பௌத்தாளோக்க மாவத்தையூடாக பம்பலப்பிட்டி வரை சென்று காலி வீதியூடாக ஜனாதிபதி மாளிகையை செல்ல முற்பட்டபோது பொலிஸார் ஆர்பாட்டத்தை இடைமறித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள ராவய அமைப்பினர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இறைச்சிக்கடையை தாக்கி சேதப்படுபடுத்தியுள்ளனர் என்றார்.
0 comments :
Post a Comment