பெரஹராவின் போது யானையொன்று குழம்பி ஓடத் தொடங்கியதால் 24 பேர் வைத்தியசாலையில்.

துளை முத்தியங்கன ரஜமஹா விகாரை வருடாந்த பெரஹரா நிகழ்வின் போது பெரஹராவில் சென்று கொண்டிருந்த யானையொன்று குழம்பி ஓடத் தொடங்கியதால் ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 24 பேர் காயங்களுக்குள்ளாகி, பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பதுளை வேல்போதிய அருகாமையில் வெள்ளியன்று இரவு 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சனநெரிசலில் காயமுற்றவர்களில் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 14 பெண்களும், ஒரு குழந்தையும் ஒன்பது ஆண்ளும் உள்ளடங்குவர். இவர்களில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஆறு பேரும், ஒரு குழந்தையும் நான்கு ஆண்களுமாக 11 பேரின் நிலை ஆபத்தானதாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பெரஹராவின் போது குழப்பம் அடைந்த யானை மயக்க ஊசி மருந்தேற்றி கட்டுப்படுத்தப்பட்டது. பதுளைப் பொலிஸார் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக பேராபத்துக்கள் எதுவும் மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து பதுளை முத்தியங்கன ரஜ மஹா விகாரை பெரஹரா ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :