இன்புளுயன்சா வைரஸ் நோயினால் கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாப மரணம்.

ன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று கர்ப்பிணித் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க குறிப்பிட்டார்.
இதுதவிர, இந்த வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட 10 கர்ப்பிணித் தாய்மார்கள் கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இன்புளுயன்சா வைரஸ் தொற்றினை உறுதிசெய்வதற்கான பரிசோதனைகளை 24 மணிநேரமும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டொக்டர் நிஹால் ஜயதிலக்க தெரிவித்தார்.
இதேவேளை, இன்புளுயன்சா வைரஸ் தொற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்புக்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :