உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்கி கெளரம்.

க்தா: மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மாணவி, ஒருநாள் கவுரவ மேயர் பதவி அளித்து கவுரவிக்கப்பட உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்த 'முதல்வன்' படத்தில் வரும் ஒருநாள் முதல்வர் பதவி போல், ஒருநாள் மேயர் பதவி வகிக்கப் போகும் அந்த மாணவி பெயர் சுனந்தா கயர்வர்.

மத்தியப்பிரதேச மாநிலம் உக்ஜைன் மாவட்டம் நக்தா என்ற நகரைச் சேர்ந்தவர். 17 வயதான சுனந்தா, இங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் அவர் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து நக்தா நகரில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து மாணவியை கவுரவிக்கவும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் வகையில் அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். வருகிற 28 ஆம் தேதியன்று மாணவி சுனந்தா மேயர் பொறுப்பு ஏற்கிறார்.

அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளை செய்து, அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார் மேயர் ஷோபா யாதவ்.

28 ஆம் தேதியன்று மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா, அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்.

சுனந்தாவின் தந்தை தொழிற்சாலையில் பணிபுரிகிறார். தாய் அங்கன்வாடி ஊழியர். சுனந்தாவின் உடன் பிறந்தோர் மொத்தம் 4 பேர். தான் என்ஜினீயராகி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே தமது லட்சிய என்று சுனந்தா தெரிவித்துள்ளார்.
விகடன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :