மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 80இலட்சம் நிதியில் விஞ்ஞான ஆய்வு கூட கற்கை நிலையம்.



ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குற்பட்ட மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 80இலட்சம் ரூபாய் பொறுமதியான விஞ்ஞான ஆய்வு கூட கற்கை நிலையம் நிர்மானிக்கப்பட்டு வியாழக்கிழமை 23.05.2013 பாடசாலையின் அதிபர் ஐ.எல்.மஃறூப் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ் எஸ் அமீர் அலி,ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ் ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம். சுபைர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை 1938ல் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக விஞ்ஞான கற்கை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2015ம் ஆண்டுக்கு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இணைத்து கொள்ளப்பட்டனர்.

அதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி ஆரம்பித்து உரையாற்றுகையில் கல்வி என்பது ஒரு மனிதனின் அழியாத சொத்து நீடித்து இறுதிவரை நிலையாக நிற்க கூடிய இச் செல்வத்தை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்கி விட்டு செல்வதற்கு அர்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்.

மேலும் அம் மாணவர்களின் உள நல சீர்திருத்திலும் ஆண்மிக ரீதியான செயற்பாடுகளிலும் தேசிய உணர்வு மிக்க நாளைய தலைவர்களாக மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந் நாட்டின் மீது விசுவாசமும் அக்கரையும் கொண்டுள்ள எம்மவர்கள் அணைவரினதும் கடமையாகும்.

அதனை எமது குழந்தைகளிடம் வீட்டிலும் பாடசாலைச் சூழல்களிலும் அடிக்கடி நினைவூட்டி அவர்களை வளர்தொடுக்க முடியும் ஆகையினால் சிறந்த கல்வியால் மாத்திரம் தான் நல்ல சூபிட்ஷமான எதிர்காலத்தை நாம் பெற்றுக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் எமது குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்கள் அவர்கள் இச் சமூகத்தின் கண்கள் தம் இரு கண்களையும் இமைகள் எவ்வாறு பாதுகாக்கின்றனவே அது போல அவர்கள் எம்மால் பாதுகாக்கப்படவும் சமூகத்தில் அவர்களுக்கான கண்னியத்தையும் மகத்துவத்தையும் வழங்குகின்றவர்களாக நாம் இருக்க வேண்டும். அவ்வாறு நாம் செயற்படுகின்ற போது தான் இந் நாட்டினை ஆளும் சிறந்த தலைமைகளை உருவாக்கும் பணிகளில் உற்சாகத்துடன் அவர்கள் ஈடுபடுவார்கள் எனக்குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :