இன்று 2424 தான சாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (24ம் திகதி) பகல்வரை நாடு முழுவதும் 2424 தான சாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெசாக் பண்டிகை கொண்டாடப்படும் இரண்டு தினங்களும் சோதனை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அறியத்தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு அறிவிப்பு வழங்கிய அனைத்து தானசாலை இடங்களுக்கும் சென்று அதன் ஏற்பாட்டுக் குழுவினருக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கியதாக உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

எனினும் முன்னறிவிப்பு இன்றி நாடு முழுவதும் பல தானசாலைகள் இயங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :