தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளுமில்லை-ஹசன்அலி

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடுகளுமில்லை.

சில ஊடகங்களும் இணையத்தளங்களும் எமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்தார்.


ஹசன் அலி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நான் எடுக்கும் முடிவுகள் யார் தயவிலும் எடுப்பதில்லை. நான் கட்சியின் கொள்கைகளின்படியே தீர்மானங்களை மேற்கொள்பவன். எவருக்கும் கூஜா தூக்குவதற்கு நான் விரும்பவில்லை.


தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் 19 ஆவது அரசியல் யாப்புச் சட்டத்தை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதனை நான் எதிர்க்கவுள்ளதாகவும் தவறான கருத்துகளை ஊடகங்கள் பரப்பியுள்ளன. 19 ஆவது அரசியல் யாப்புச் சட்டத்தை கொண்டு வருமளவுக்கு தலைவர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படமாட்டார் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.


அதிகாரப் பரவலாக்கல் மூலமே இன்று தீர்க்கப்படாதுள்ள எத்தனையோ சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு காலதாமதமின்றி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். முஸ்லிம்களோ, தமிழர்களோ தனி இனமாக அடையாளப்படுத்தப்பட்டு செறிந்து வாழும் பூர்வீக பிரதேசங்களில் காணி அதிகாரம் வழங்கப்படுவது அவசியம் என்று முஸ்லிம் காங்கிரஸிடம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது.


சில சக்திகள் முஸ்லிம் காங்கிரஸுக்குள் பிளவினை ஏற்படுத்தி குளிர்காய முனைகின்றமை ஒரு போதும் நிறைவேறாத கனவாகும் என்றார்.(vv)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :