சிங்கள குடும்பங்களில் ஐந்து பிள்ளைகள் பெற்றெடுக்கும் தம்பதியினருக்கு பணப்பரிசு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரவாஹெர சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் குறைவாக உள்ளதால் எதிர்கால நிலைமையை கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கிணங்க இந்த தீர்மானமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது
சிங்கள குடும்பங்களுக்குள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில் தேக்கமான நிலை ஒன்று காணப்படுகிறது.இது பிற்காலத்தில் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.இன்று சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாததன் விளைவு ,நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து பிள்ளைகளைக் கொண்டு வந்து வளர்க்கும் சூழலொன்று ஏற்பட்டுள்ளது.அதனால் சிங்கள இனத்தவர்கள் இதுதொடர்பில் கவனத்திற் கொண்டு செயற்படவேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment