இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவையில் 32 வருகாலம் சேவையாற்றிய சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் ச.தியாகராசா இன்று(31) திங்கள் கிழமை ஓய்வு பெறுகின்றார்.
இவர் SLTES-1 எனும் உயர்ந்த பதவியில் கிழக்கில் நீண்காலம் சேவையாற்றியுள்ளார்.
இவர் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் பிரதி அதிபராகவும்,அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் அதிபராகவும்,அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரியில் பணிப்பாளரும்,தனது சேவையின் இறுதியின் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அதிபராக இருந்து ஓய்வு பெறுகின்றார்.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் 1994ல் பட்டதாரி பயிலுனராக இணைந்து 1995ல் உதவி போதனாசிரியராக கடமையாற்றி 1999ல் இலங்கை தொழில்நுட்ப கல்வி சேவை மூன்றில் பதவியேற்றார்.
இவர் முகாமைத்துவ பட்டத்தை யாழ்பாண பல்கலைக்கழத்திலும்;(BBA),பட்டமேல் படிப்பை(PGDE) திறந்த பல்கலைக்கழத்திலும்,முகாமைத்துவத்தில் முதுமானி பட்டத்தினை(Mmgt) மிகிந்தலை ரஐரட்ட பல்கலைக்கழத்திலும்,இதழியல் டிப்ளோமாவை (Dip.in Journalism) தென் கிழக்கு பல்கலைக்கழத்திலும் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் பிரதி அதிபராக பொறுப்பேற்ற காலப்பகுதி மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு இக்கல்லூரியின் மைல்கல் என்று கூறலாம். இவர் பதவியேற்ற பின்னர்(2012) புதிதாக ஒன்பது கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டது.இதில் ஒரு வருடத்தில் 15 கற்கை நெறிகள் செய்யப்பட்டது சிறப்பம்சமாகும்.மாணவர்களின் நுழைவு மட்டத்தினை இரட்டிப்பாக்கினார் இது இலங்கையில் சாதனையாக கொள்ளப்பட்டு சிங்கபூருக்கான புலமைப்பரில் கிடைத்தமை குறிப்பித்தக்கது.இன்னும் பலதிட்டங்கள் இவரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் நடாத்தப்பட்ட உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக, தனியான நிறுவனமாக உயர் தொழில்நுட்பகல்வி நிறுவகம்() உருவாக்கப்பட்டது.இதற்கான முதலாவது கல்வி இணைப்பாளராக செயல்பட்டு, இதற்கான காணி ஆரையம்பதி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.அமலநாதனின் உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு,உலக வங்கியின் உதவியுன் கட்டுமான பணிக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு கால்கோளாக தொழிற்பட்டவர்.
எங்கு பிரச்சனைகள் காணப்படுகின்றதோ அதனை திறப்பதற்கான திறவுகோலாக இவரையே திணைக்களம் பயன்படுத்திக்கொள்ளும்.
அந்த அடிப்பiயில் கடந்த 5வருட காலமாக எந்தவிதமான NVQ சான்றிதழும் வழங்கப்படாத அக்கiரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபராக 2017ல் பொறுப்பேற்றார்.
இக்கல்லூரியில் புதிய ஆறு கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டமையும் அனைத்து கற்கை செறிகளும் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய நான்கு மாத காலப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட NVQ சான்றிதழை அமைச்சரை வரவழைத்து மிக பிரமாண்ட விழாவாக நடாத்தினார்.அந் நிகழ்வு வரலாற்றின் மைக்கல்லாக பதியப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவின் மகத்துவத்தினை அவதானித்த அமைச்சர் இவரின் திறமைக்கு இச்சிறிய கல்லூரி போதாது எனவே உடனடியாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரியில் பணிப்பாளராக நியமிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.
அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரி இலங்கையில் இறுதி நிலையில் காணப்பட்டது.இங்கு பாரிய பிரச்சனைகள் காணப்பட்டது. இருந்தும் மன உறுதியுடன் 2018ல் பணிப்பாளராக பொறுப்பெடுத்து பாரிய வேலைத்திட்டத்தினை மேற்கொண்டார். இதில் கடந்த இரண்டு வருடகாலமாக திறக்கப்படாதிருந்த 500மில்லியன் செலவில் கட்டப்பட்ட கட்டிடதொகுதியினை திறந்தமை.இக் கட்டிடத்துற்கான பாதையினை அமைப்பதற்காக தனிப்பட்ட முயற்ச்சியில் 10 மில்லியன் செலவில் காபெற் உள்வீதியினை அமைத்தமை,10மில்லியன் செலவில் புதிய கட்டத்துக்கான தளபாடங்களை பெற்றுக்கொடுத்தமையினைக் குறிப்பிலாம். இத்தோடு புதிய டிப்ளோமா, உயர் டிப்ளோமா NVW 5/6 கற்கை நெறிகளை ஆரம்பித்தமை. இதில் விசேடமாக புதிய விவசாய 5/6 கற்கைநெறியினை ஆரம்பித்து இதங்கான புதிய விவசாய பண்ணையினையும் உருவாக்கினார். அனைத்து கற்கை செறிகளும் செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புதவி உயர்வு காரணமாக இடமாற்றம் வரும் போது மீண்டும் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டார்.இங்கும் பாரிய உள்வீட்டு பிரச்சனைகள் மற்றும் அரசியல் தலையீடுகள் அதிகமாக காணப்பட்டது.இங்கு தமிழர் ஒருவர் வேலை செய்வது என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல,பல சவால்களுக்கு மத்தியிலே அரச பணியினை மேற்கொண்டார் என்பதனை தனது 32வருடகால அனுபவ ரீதியாக தெரிவித்தார்.தனது நிரந்தர வதிவிடமான மட்டக்களப்பில் இருந்து தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் ஒன்பது வருடகாலம் அரச சேவையினை மேற்கொண்டு ஓய்வு பெறுகின்றார்.
இலங்கையில் நீண்டகாலம் போதனாசிரியராகவும்,15வருடகாலம் நான்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் நிர்வாகத்தினையும் மேற்கொண்டுள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் சிங்கள பெரும்பாண்மை மாணவர்கள் கல்வி பயிலும் அம்பாறை ஹாடி தொழில்நுட்பவியல் கல்லூரியின் வரலாற்றில் கடமையாற்றிய முதலாம் தரம் தகுதிபெற்ற முதலாவது நிரந்தர தமிழ் பணிப்பாளர் என்ற பெருமை இவரையே சாரும். அதைப்போல முஸ்லிம் மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் அக்கரைப்பற்று, சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் தரம் தகுதிபெற்ற தமிழ் அதிபர் என்ற வரலாறும் இவரையே சாரும்.இதன் மூலம் மூவின மாணவர்களுக்கும் தனது சேவையினை எந்தவித இனப்பாகுபாடு இன்றி 'செய் அல்லது செத்துமடி' எனும் செயல்பாட்டில் அரச பணியினை செயல்படுத்திய பெருமைக்குரியவர்.
எமது நாட்டிலே அதிலும் சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படும் வறுமை, வேலையின்மை என்பவற்றுக்கான சிறந்த தீர்வான தொழில் நுட்ப கல்வியையும் NVQ முறைமையினையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
இவருடைய சேவைக்காலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை வளிநடாத்தி நிலையான வாழ்வாரத்தினை உருவாக்கி, புதிய சிந்தனையினை மாணவர்கள் மத்தியி;ல் கொண்டு சென்ற மறத்தமிழன் ஓய்வு பெறுகின்றார்
இவர் களுதாவளையினை பிறப்பிடமாகவும்,சதாசிவம் வள்ளியம்மையின் பதல்வரும்,களுதாவளை தேசிய பாடசாலையின் பழைய மாணவனும், வின்சன் தேசிய பாடசாலை ஓய்வுநிலை விஞ்ஞான ஆசிரியர் விஐயகுமாரியின் கணவரும்,கொழும்பு,றுகுணு மருத்துவபீடத்தில் கல்வி பயிலும் அபிஷேகன்,ஜதுகிசனின் ஆகியோரின் தகப்பநாருமாவார்.இவர் வீரகேசரி, தினகரன் ஆகிய தேசிய பத்திரிகையின் பந்தி எழுத்தாளரும்,சிறந்த விவசாயியும் ஆவார்.மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் தாரக மந்திரத்துடன் அரச சேவையில் செயல்பட்ட தியாகராசாவின் ஓய்வுகாலம் சிறக்க வாழ்த்துவோம்.

0 comments :
Post a Comment