உங்கள் வீட்டில் கண்காணிப்பு கமிரா உள்ளதா..? இதனை அவசரமாக வாசியுங்கள்

அண்மையில் கனடாவிலுள்ள நியுபவுன்லாந்து மாகாணத்தில் வதியும் ஒருவர் தனது வீட்டிற்கு கண்காணிப்புக் கமிராக்களைப் பொருத்தியிருந்தார். இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வீட்டின் உள்ளே யாராவது நுழைந்தாலோ அல்லது நடமாடினாலோ இந்த வீடியோக் கமிராவின் வீடியோப் பதிவு மின்னஞ்சலினூடாக வீட்டின் உரிமையாளரைச் சென்றடையும்.
இந்தக் கண்காணிப்பிற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட மேற்படி உரிமையாளர் இந்த கமிரா மற்றும் இதணோடினைந்த மின்னஞ்சல் சேவைகள் என்பன கடந்த செப்ரம்பரில் வேலை செய்ய ஆரம்பித்ததும் தான் இல்லாத வேலையில் வீட்டை யார் திறக்கிறார்கள், யார் உள்ளே நடமாடுகிறார்கள் என்ற தகவல்கைளப் பெறத் தொடங்கினார்.
தானில்லா நேரத்தில் தனது வீட்டிற்குள் ஆணொருவர் உள்ளாடையுடன் மாத்திரம் நடந்து திரிவதையும் தனது வீட்டின் தோற்றமே மாறுபட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியுற்றுப் போனார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலிருந்தவருக்கு வந்த இன்னொரு கண்காணிப்பு மின்னஞ்சலில் தனக்குத் தெரியாத பெண் ஒருவர் ஒரு வீட்டினுள் நடமாடித் திரிவதையும் கண்ணுற்றுள்ளார்.
ஏதோ பேய், பிசாசுகள் சம்பந்தமான படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெற்ற அந்த நபர் அட தான் வேறு யாரோ ஒருவருடைய கமிராவிலிருந்து தகவல்களைப் பெறுகிறேன் என்பதை உணர்ந்த போது அவருக்கு இன்னொரு பாரிய பிரச்சினையும் கண்முன்னே நிழலாடியது. அதுவே அவரது பெரியபிரச்சினையாகும்.
அது யாதெனில் நான் வேறொருவருடைய வீட்டின் தகவல்களைப் பார்க்கிறேன் என்றால் அப்படியாயின் நான் வீட்டில் நடமாடும் போது இந்தக் கமிரா எனது தகவல்களை யாருக்கு அனுப்புகிறதோ என்ற கவலையே அவருக்கு. நாங்கள் என்ன தீர்வை இவருக்கு கூற முடியும்?

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :