Share on
கல்முனை பிரதேசத்தில் பதினைந்து வயது பாடசாலைச் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அக்காவின் கணவன் (அத்தான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.
கல்முனை முஸ்லிம் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்விகற்று வரும் மாதவர் வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு கடத்திச் சென்று சிறுமியின் அக்காவின் கணவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என பெற்றோர் பொலிஸில் நேற்று (09) முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று காலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
(அத தெரண)

0 comments :
Post a Comment