மண்ணில் மலர்ந்த மாநபியே..!

விண்ணில் பூத்து 
மண்ணில் மலர்ந்த மாநபியே 
தரம்பார்து ஒதிக்கிட முடியா 
தனிப் பெரும் பூமான் நபியே... 

தவமிருந்து பெற்றாரே-
எம் தாயும் ஆமினா உம்மா 
தவம் என்ன நான் செய்தேனோ 
தாஹா நபியே 
உமை நான் நபியாக பெறுவதற்கு... 

மண்ணிரங்கி வந்தீரே 
மறை குர்ஆன் எனக்கு தந்தீரே 
நல் வழி செல்ல நிதம் நல்லுரை தந்தீரே 
தீமைகள் அழித்தீரே.... 

காலமெல்லாம் கருத்தாக கடைப்பிடித்து 
உம் வழியில்-
நானுணர்ந்து மீளா துயர் தனிலும்
-உம் மீலாதை நான் புகழ்ந்திடுவேன் 

இரவு பகல் விழித்திருந்து 
ஹீராவில் தனித்திருந்து 
இறை மறை தந்த கோமானே 
சாதியை ஒழித்த 
சமத்துவம் தந்த 
சற்குணம் கொண்ட சீமானே... 

வானோர் வின் மீன்கள் எல்லாமே 
வங்கக்கடல் நதி மலை பாதாலம் 
வாயாற வாழ்திடுமே உம்புகளை 
பெண் விடுதலை தந்த பூமானே... 

மடமையில் குளித்த மானிட மண் தனிலே 
முத்துக்குளித்து பிறந்த நபியே-
உம் கால் பட்டதாலே கஃபாவிவும் கருவானது 
காவியமாய் புவியோர் நெஞ்சில் 
மதினாவும் மகிமை கொண்டது.. 

கெடியோன் அபூஜஹ்லின் கொடுமாட்சியும் 
கிஸ்ராவின் கோட்டை கூட சிதறிப்போச்சி 
அடிமை சாசணமும் அடியோடு அழிந்து போச்சே-
உம் அதிசய செவ்விதழ் ரோஜா முக ஒளியாளே.. 

அகிலத்தின் மத மேதைகள் கூட 
அருமை நபி முஹம்மதென்று அகமகிழ்ந்து 
போற்றும் உம்மை அழகாக வாழ்துகிறோம் 
அப்துல்லாஹ்வின் அன்பு மகனே 
வருடா வருடம் வந்து போகும் 
ரபியுல் அவ்வல் திங்களன்று 
பிறைபண்ணிரெண்டில் 
உணவளித்து 
வாய்நிறைய ஸலவாத் சொல்லி 
உம்புகழ் மாலை பாடுகிறோம் 
பூமானே நாயகமே... 

ஸலாத்தும் ஸலாமும் 
உன்மீது என்றென்றும் ஓதிடுவேன்-
உம் வழி நாம் வாழ்திடுவேன் 
பெருமானே நாயகமே..

ஸல்லல்லாஹுஅலாமுகம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் ஸல்லல்லாஹுஅலாமுகம்மது யாரப்பி ஸல்லி அலைஹிவ ஸல்லிம். 
-கவிப்பிரியன் ஆதில்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -