இந்தியாவில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச ஆயூர்வேத மாநாட்டுக்கு பயணமாகிறார் டாக்டர் கே.எல்.எம்.நக்பர்

Share on



( எம். ஐ.முஹம்மட் பைஷல், எஸ்.எம்.அறூஸ் )

இந்தியாவில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச ஆயூர்வேத மாநாட்டுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இந்தியா பயணமாகின்றார்.
இந்தியா மத்திய பிரதேசத்திலுள்ள கோபால் நகரில் நடைபெறவுள்ள இம்மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் வைத்திய பொறுப்பதிகாரி டாக்கடர் நக்பர் மூட்டுவலி மற்றும் பக்கவாதம் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்திசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாக கேரளா ஆயூர்வேத வைத்தியாலையுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் ஆயூர்வேத வைத்தியத்துறையை மக்கள் காலடிக்கு எடுத்துச் சென்று இத்துறையில் பல சாதணைகளை ஏற்படுத்தியதில் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் பெரும் பங்கினை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு ஆயூர்வேதம் தொடர்பாக பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வைத்திய குறிப்புக்களையும் எழுதி வருகின்றார் என்பதும் விஷேட அம்சமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :