Share on
( எம். ஐ.முஹம்மட் பைஷல்இ எஸ்.எம்.அறூஸ் )
நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலையில் தொற்று நோய் அல்லாத நோய்களுக்குரிய மாதாந்த விஷேட வைத்திய சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
தொற்று நோய் அல்லாத நோய்களுக்கான இந்த விஷேட வைத்திய சிகிச்சைகள் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரத்தில் புதன் கிழமைகளில் காலை 8 மணி முதல் பி.ப 2 மணிவரை இடம்பெறும். இவ்வைத்திய சேவையில் வாதம்இ சீனி வியாதிஇ இரத்த அழுத்தம்இ பக்கவாதம் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களுக்குரிய இச்சிகிச்சைகள் முற்று முழுதாக இலவசமாக நடத்தப்படுகின்றது.
அத்துடன் இரத்தப் பரிசோதனைகளும்இ வைத்தியப் பரிசோதனைகளும் இடம்பெறுவதுடன் நோயாளிகளுக்கான வைத்தியப் பரிசோதனை கையெடுகளும் இலவசமாக வழங்கி வைக்கப்படுவதாகவும்இ இப்பரிசோதனைகளை மேற்கொண்ட நோயாளிகளுக்கு உரிய நோய்க்கான மருந்து வகைகளை தொடர்ச்சியாக ஒரு மாத காலத்துக்கு பாவிப்பதற்காக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டும் வருகின்றன.

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த குறித்த விஷேட ஆயூர்வேத வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்ளவதற்காக இவ்வைத்தியசாலையிலிருந்தும்இ வெளிப் பிரதேசங்களிலிருந்தும் வைத்தியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டு இச்சேவைகளை ஒவ்வொரு மாதமும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் நக்பர் மேலும் தெரிவித்தார்.
( எம். ஐ.முஹம்மட் பைஷல்இ எஸ்.எம்.அறூஸ் )நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலையில் தொற்று நோய் அல்லாத நோய்களுக்குரிய மாதாந்த விஷேட வைத்திய சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் நடைபெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
தொற்று நோய் அல்லாத நோய்களுக்கான இந்த விஷேட வைத்திய சிகிச்சைகள் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரத்தில் புதன் கிழமைகளில் காலை 8 மணி முதல் பி.ப 2 மணிவரை இடம்பெறும். இவ்வைத்திய சேவையில் வாதம்இ சீனி வியாதிஇ இரத்த அழுத்தம்இ பக்கவாதம் மற்றும் மூட்டுவலி போன்ற நோய்களுக்குரிய இச்சிகிச்சைகள் முற்று முழுதாக இலவசமாக நடத்தப்படுகின்றது.
அத்துடன் இரத்தப் பரிசோதனைகளும்இ வைத்தியப் பரிசோதனைகளும் இடம்பெறுவதுடன் நோயாளிகளுக்கான வைத்தியப் பரிசோதனை கையெடுகளும் இலவசமாக வழங்கி வைக்கப்படுவதாகவும்இ இப்பரிசோதனைகளை மேற்கொண்ட நோயாளிகளுக்கு உரிய நோய்க்கான மருந்து வகைகளை தொடர்ச்சியாக ஒரு மாத காலத்துக்கு பாவிப்பதற்காக இலவசமாக வழங்கி வைக்கப்பட்டும் வருகின்றன.

இம்மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த குறித்த விஷேட ஆயூர்வேத வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்ளவதற்காக இவ்வைத்தியசாலையிலிருந்தும்இ வெளிப் பிரதேசங்களிலிருந்தும் வைத்தியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டு இச்சேவைகளை ஒவ்வொரு மாதமும் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிந்தவூர் மாவட்ட ஆயூர்வேத வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் நக்பர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment