ஹஜ் விடயங்களை அரசியலாக்க முயற்சிப்போர் ஆன்மீகப் பக்குவம் பெறாதவர்கள் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்



“பேசுவதற்கு தலைப்பில்லாதவர்கள் மினா விவகாரத்தை பேசுகின்றனர்; ஷேக் லா-பா உஸ்மானின் 4,000 மில்லியன் டொலர் தொடர்பான தகவல்களும் எம்மிடம் உள்ளன” என பதிலடி

அஹமட் இர்ஷாட்-
புனித ஹஜ் பயணத்தின் போது ஏற்படக்கூடிய சவால்களையும் அசௌகரியங்களையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு ஆன்மீகப் பக்குவத்தை அடைய முடியாத சிலர், அந்த மார்க்கக் கடமையையே அரசியலாக்க முயற்சிப்பதாக பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஹஜ் பயணம் மற்றும் மினாவில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“கடந்த ஹஜ் காலப்பகுதியுடன் ஒட்டிய வகையில் புனித வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்த விடயத்தை சிலர் ஊடகங்களில் பெரிதுபடுத்தி, இனங்களுக்கிடையில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயன்றனர். எனினும், அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அவதானத்துடனும் இந்த விடயத்தைக் கையாண்டதன் மூலம் அந்தச் சில்லறை முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களை கையாளுபவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். மீண்டும் இந்த நாட்டில் இனவாதத்தையும் இன முரண்பாடுகளையும் உருவாக்க விரும்புகிறீர்களா?

இன்று பேசுவதற்கு வேறு தலைப்பில்லாத சிலர், புனிதமான மார்க்க விடயங்களையே அரசியலுக்குள் இழுத்துவர முயற்சிக்கின்றனர். ஹஜ் பயணத்தின் மகத்துவத்தையும் அதன் புனிதத்தன்மையையும் உணராதவர்களே மினாவில் நடைபெற்ற விடயங்களை அரசியல் விவாதமாக மாற்ற முனைகின்றனர்.

ஷேக் லா-பா உஸ்மானின் 4,000 மில்லியன் டொலர் தொடர்பான விவரங்களும் அதனுடன் சம்பந்தப்பட்ட தகவல்களும் எம்மிடம் உள்ளன. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் (DCC) கூட்டம் ஒன்றைக் கூட சுமுகமாக நடத்த அனுமதிக்காமல் குழப்பம் ஏற்படுத்தியவர்கள், இன்று மினாவில் உள்ள ஹஜ் யாத்திரிகர்கள் மற்றும் அங்குள்ள மக்களின் நிலைமைகள் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஹஜ் விடயத்தில் முழுமையான கரிசனையுடனும் பொறுப்புடனும் செயற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை இதைவிடவும் சிறப்பாக முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று, ஹஜ் தொடர்பான எந்தவொரு விடயமாக இருந்தாலும், தேவையான விசாரணைகளையும் விளக்கங்களையும் வழங்குவதற்கு ஹஜ் குழு முழுமையாகத் தயாராக உள்ளது” என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :