எல்-நினோ நிலைமையை எதிர்கொள்வதற்கு விரைந்த ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்துக் கொள்வோம். -யோசனை முன்வைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



ல்வேறு அலைவரிசைகளில் தற்சமயம் எல்-நினோ (El Niño) மற்றும் லா-நினா (La Niña) தொடர்பில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு முன்பே, இது தொடர்பாக காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி முதன்முதலாக கலந்து பேசினோம். பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களை அழைத்து அன்றே இது குறித்து கலந்துரையாடினோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் கூறும் விதத்தில் எல்-நினோ மற்றும் அதைத் தொடர்ந்து வரும் லா-நினா நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என்று கணிப்புகள் வெளியாகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கலக்கமான இடைநிலை சூழ்நிலையில் ஒரு நாடாக கவனத்துடன் இதை எதிர்கொள்ள வேண்டும். NOAA (தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்) என்ற சர்வதேச அமைப்பு கிழக்கு திசையில் விலகும் வெப்ப நீர் ஓட்டம் காரணமாக கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிகமாக உயரும் என்று மிகவும் ஆபத்தான கணிப்புகளை வெளியிட்டுள்ளன. சூப்பர் எல் நினோ நிலைமை ஏற்படலாம் என்று 63% ஆன சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் கணிப்புகள் வெளிவருகின்றன. இதனால் கடுமையான வறட்சி காலம் அல்லது கூடிய மழைப்பொழிவு கொண்ட காலநிலை ஏற்பட்டு, கூடிய அவதானம் மிக்க காலநிலை சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயம், நீர், வனவிலங்கு-மனித மோதல் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளோடு, பின்னர் ஏற்படும் லா-நினா நிலைமையால் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்கு அப்பால் கனமழையையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் அச்சுறுத்தலாக இது அமையலாம். இதனால் நீர் பிரச்சினைகள் அதிகரித்து, மின் உற்பத்தி கூட பிரச்சினைக்குரிய விடயமாக மாறலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஆகவே, இதனை எதிர்கொள்ள பிரத்தியேகமான ஜனாதிபதி செயலணியொன்று அமைய வேண்டும். அரச கொள்கைகளுடன் இணைந்து, சவால்களை எதிர்நோக்கித் தீர்வுகளை தேடுவது இதன் ஊடாக நடக்க வேண்டும். இது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை நடக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :