இனியும் மக்களின் காணிகளை இராணுவம்வைத்திருப்பதற்கு எந்த நியாயமும் கிடையாது- தவிசாளர் நிரோஷ்




க்களின் நிலங்கள் மக்களுக்கே செந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலி வடக்கு மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழுவின் காணி விடுவிப்பிற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், முப்பத்தி ஏழு ஆண்டுகளாக துப்பாக்கி முனையில் அரசு மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. இவ் அபகரிப்பிற்கு எதிராக யுத்தத்தின் பின்னரான 17 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எமது மக்கள் போராடி வருகின்றனர். பதவியில் உள்ள அரசாங்கம் மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறியே ஆட்சிக்கு வந்தது.

இந் நிலையில் தற்போது நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த நுற்றுக்கணக்கான மக்கள் தமது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி வீதியில் போராடிக்கொண்டிருக்கின்றனர். இன்றும் வளமான மக்களுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. இந் நிலங்களில் படையினர் தொழ்ற்சாலைகளை நடாத்யும் விவசாயம் ஆமற்கொண்டும் பிழைக்கின்றனர். மக்கள் வாழ முடியாதவர்களாக குடியிருக்க நிலமற்றவர்களாக அலைகின்றனர். அரசாங்கம் தீர்வை முன்வைக்காது வேடிக்கை பார்க்கின்றது.

மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நாட்டில் பொறிமுறையில்லை. சட்டரீதியில் காணிகளை கொண்ட மக்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காக இலங்கையில் எவ்வாறும் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகின்றது. ஜனாதிபதி யாழ் வந்தபோது இந்தப் பாதையில் தனியாக நடந்து சென்றார். ஆகவே இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. யதார்த்தம் அப்படி காணப்படும் போது பொய்யாக படைத்தளங்களை நிறுவி அதற்கு பொதுமக்களின் காணிகளை கபளிகரம் செய்து ஓர் இனவாத முன்னெடுப்பே இங்கு நடக்கின்றது என்பதை வெளியுலகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே உடனடியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மக்களிடத்தில் கையளிக்க வேண்டும். அததுடன் இதுவரை காலமும் இராணுவத்திற்குப் பயன்படுத்தியமைக்கான நஸ்ட ஈட்டையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :