ஜனாதிபதி வருகை தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு- நிந்தவூரில் சம்பவம்

பாறுக் ஷிஹான்-

னியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த பாரபட்சமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்க ஈரந்த நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான அபிவிருத்தி வேலைகளை அங்குரார்ப்பணம் நிகழ்வில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இதன் போது ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் இவ்வாறான அநீதி இழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல் திணைக்களம் ஊடாக குறித்த நிகழ்விற்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்த தனியார் ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் குறித்த நிகழ்விற்கு அழைத்து பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்து செல்லப்பட்ட போதும் ஜனாதிபதி ஊடகப்பிரிவிற்கு பொறுப்பான நபரினாலும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினராலும் செய்தி சேகரிப்பது தொடர்பில் முற்றாக தடுக்கப்பட்டனர்.

தனியார் ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் அரச ஊடகங்களுக்கு அங்கு நடைபெற்ற சகல நிகழ்விற்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர ஊடகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திலும் கூட எந்தவொரு வசதியும் அங்கு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.கடந்த கால அரசாங்கத்திலும் இவ்வாறு தான் ஊடகங்களுக்கு மேற்கொள்ளப்பட் அநீதிகளை சுட்டிக்காட்டி இன்று வந்த அரசாங்கமானது ஊடகங்களுக்கு சுதந்திரமாக செய்தி சேகரிப்பதை தடுத்தமை கவலைக்குரியதாகும்.

மேலும் கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மஞ்சுளஇ திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல் பாசித்இ தாஹிர்இ உதுமாலெப்பை உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :