இன்று கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும்-படங்கள்









வி.ரி. சகாதேவராஜா-

ல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்தியசாலைக் குழுவின் ஏற்பாட்டில்,புதிதாக வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையேற்ற மருத்துவர் பொன்னுச்சாமி ஸ்ரீ சங்கர் மற்றும் மகத்தான சீரிய சேவையாற்றிவரும் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் மற்றும் சிரேஷ்ட வைத்திய அதிகாரி மருத்துவர் சாமித்தம்பி ராஜேந்திரா ஆகியோருக்கு வரவேற்பு விழாவும் கௌரவிப்பு விழாவும் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு வைத்தியசாலை குழுத் தவிசாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சந்திரசேகரன் ராஜன் தலைமையில் இன்று (22) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது .

முன்னதாக மறைந்த முன்னாள் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் லங்கா ஜெயசிங்கவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராட்டுக்கள் பெறும் மூன்று மருத்துவர்கள் தொடர்பான விசேட பாராட்டு உரையை,
வைத்தியசாலைக் குழுவின் பிரதித் தவிசாளரும், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார் .
மூன்று மருத்துவர்களையும் வைத்தியசாலை குழுவினர் அனைவரும் இணைந்து, பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

குழு உறுப்பினர் என்.சௌவியதாசன்
நிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்தளித்து நன்றி உரையாற்றினார்.

நிகழ்வில் வைத்தியசாலை குழுவினர் மற்றும் வைத்தியசாலை சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :