இளையோர் திறமைகளை வளர்க்கும் "இளையோர் சங்கமம்"



லைநகரில் நீண்டகாலமாக கலை மற்றும் இலக்கியத் துறைகளில் தனித்துவமான பணிகளை முன்னெடுத்து வரும் புதிய அலை கலை வட்டம், இளைஞர்களின் ஆளுமை மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்தும் நோக்கில் "இளையோர் சங்கமம்" எனும் சிறப்பு நிகழ்வை எதிர்வரும் 2027 ஜூலை 5ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் நிறுவனர் ராதாமேத்தா தெரிவித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு முதல் கலை மற்றும் இலக்கியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் புதிய அலை கலை வட்டம், அதன் இளைஞர் அணியை உருவாக்கி, வளர்ந்து வரும் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் களங்களையும் ஏற்படுத்தி வழங்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு முதல் இளைஞர்களை மையப்படுத்தி பட்டிமன்றங்கள், கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், மாதாந்த ஹைக்கூ கவியரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வருவதன் மூலம் இளம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் பணியில் புதிய அலை கலை வட்டம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, இளைஞர் அணியின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், புதிய தலைமுறை இளைஞர்களை கலை, இலக்கியம் மற்றும் சமூக செயற்பாடுகளுடன் இணைக்கவும் இந்த "இளையோர் சங்கமம்" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலை, இலக்கியம், ஊடகம், விவாதம் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவமிக்க வளவாளர்களின் பயிற்சி அமர்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வு இளைஞர்களின் தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்நிகழ்வில் இணைந்து பயன் பெற விரும்பும் கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் 075 4880172 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்களது பங்கேற்பை உறுதிப்படுத்துமாறு புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :