மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி : ஹாதி இல்லம் சம்பியனானது !

நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நிகழ்வு 13 வருடங்களின் பின்னர் இன்று (18) திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர்கள் அமைப்பின் பூரண அனுசரணை மற்றும் ஆதரவுடன் பாடசாலை அதிபர் எம்.சி. நஸ்லின் ரிப்கா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை கரையோர பிராந்திய அபிவிருத்திக் குழுத் தலைவருமான ஏ. அதம்பாவா கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஹஸீன், எம்.எல்.எம். முதர்ரிஸ், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மாலிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு விளையாட்டு திறன்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் 326 புள்ளிகளை பெற்று ஹாதி இல்லம் (பச்சை) இம்முறையும் மீண்டும் சம்பியானது. இரண்டாம் இடத்தை 288 புள்ளிகளுடன் வாபி இல்லமும் மூன்றாம் இடத்தை 236 புள்ளிகளுடன் ராஜி இல்லமும் தனதாக்கி கொண்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :