பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம் – கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை


நூருல் ஹுதா உமர்-

ரு பாடசாலையினதும் அல்லது அரச நிறுவனங்களினதும் இலட்சினை மற்றும் பெயர்பலகைகள் அவற்றின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளங்களாகும் என கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான இலட்சினைகள் மற்றும் அடையாளங்களின் பயன்பாடு பொதுநிர்வாக அமைச்சின் நிர்வாகக் கோவை விதிகளின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை எந்த தனிநபரும் அனுமதியின்றி மாற்றம் செய்தல் அல்லது சட்டத்திற்கு முரணாக பயன்படுத்துதல் குற்றச்செயலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2026 மே 07 ஆம் திகதி சாய்ந்தமருது நகரசபை தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, பாடசாலையின் அங்கீகரிக்கப்பட்ட இலட்சினை மாற்றம் செய்யப்பட்டு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சில நபர்களுக்கு நேரடியாக அறிவுறுத்தப்பட்டு, குறித்த பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுதல், சமூக வலைத்தளங்களில் பகிர்வு செய்தல் அல்லது அதற்கு ஆதரவான பின்னூட்டங்களை வெளியிடுதல் போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படும் என்றும், அவ்வாறான செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பாடசாலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை இலட்சனையை சாய்ந்தமருது ஸாஹிரா தேசிய பாடசாலை என சிலர் மாற்றி வெளியிட்டு வருகின்றமையை அடுத்தே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :