சிறுவர் தினமா?
++++++++++++
Mohamed Nizous
காலைக் கூட்டத்தில்
கால் கடுக்க நிற்கவைத்து
ஒரு மணி நேரம்
உரை சிறுவர் தினத்துக்கு
உண்ணாமல் வந்தவனுக்கு
உலகம் வெறுக்க...
சிறுவர் தினம்
சிறப்பதிதி வருகிறார்
வெய்யிலில் வரவேற்க
வியர்க்க நிற்கிறார் சிறுவர்
ஏழைப் பிள்ளைக்கு
இலவச செருப்பு
சிறுவர் தினத்தில்
ஷெல்பியுடன் கொடுத்தார்
அவன் காலின் கீழ்
மானமும் செருப்பும் மிதிபட
சிறுவர் தின நிகழ்வு
சின்னத் திரை ஊடாக
இடைக்கிடை விளம்பரத்தில்
இங்லிஸ் பட ..........
சிகரட் வாங்கிட்டு
சில்லறைக்கு டொபி வாங்கு
சிறுவர் தினத்துக்கு
சிறப்புத் தள்ளுபடி டடா
பள்ளிக்குப் போகாமல்
பசைவாளியுடன் சிறுவன்
போஸ்டர் ஒட்டுகிறான்
போராடவாம் சிறுவருக்காய்
சிறுவர் தின அன்பளிப்பாய்
செல்போண் கொடுத்தார்
அடுத்த சிறுவர் தினமுன்
அவனை நாசமாக்க
ஒருவர் இருவர்
சிறுவர் தினத்தின்
அருமை புரியாது
அழிப்பதை எழுதினேன்