தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இணையவழி போக்குவரத்து முகாமைத்துவ முறைமை அறிமுகம்



நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் டிஜிட்டல் முன்னெடுப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை மேலும் இலகுவாகவும், வினைத்திறனுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கும் நோக்கில் Online Transport Management System (TMS) எனும் இணையவழி போக்குவரத்து முகாமைத்துவ முறைமை இன்று (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபரின் பங்குபற்றலுடன் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் இணையவழி போக்குவரத்து முகாமைத்துவ முறைமையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து நிர்வாகச் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட Online Transport Management System (TMS) மென்பொருளை உருவாக்கி, அதன் நடைமுறைப்படுத்தலுக்கு தேவையான பணிகளில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்கள் முக்கியமானதும் முழுமையானதுமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

பல்கலைக்கழகத்தின் வாகனப் பயன்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை நவீன தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரம்பரிய கையேடு அடிப்படையிலான போக்குவரத்து நிர்வாகச் செயற்பாடுகளுக்குப் பதிலாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Online Transport Management System ஊடாக பல்கலைக்கழக வாகனங்களின் பயன்பாடு, போக்குவரத்து கோரிக்கைகள், வாகன ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து நிர்வாக நடவடிக்கைகளை முறையாக ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்ய முடியும். இதன் மூலம் நேரத்தைச் சேமிப்பதுடன், நிர்வாகச் செயற்பாடுகளின் துல்லியம், ஒருங்கிணைப்பு மற்றும் வினைத்திறனையும் மேம்படுத்த முடியும்.

மேலும், பல்கலைக்கழகத்தின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம் சேவை வழங்கலை விரைவுபடுத்துவதுடன், நிறுவன வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் இந்த முறைமை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரச நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தமது நிர்வாகச் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தி வரும் நிலையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இவ்வாறான தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாக முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுவது பல்கலைக்கழகத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் (Digital Transformation) முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம் மற்றும் ஆர்.கே. அகமட் றிபாய் காரியப்பர் உள்ளிட்டோரும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.எம். சமீம், பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, பிரதி பதிவாளர் ஐ.எல். தஸ்லீன், உதவிப் பதிவாளர் சி.எஸ்.வி. க்ருஷாந்தன், ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம். அஹமட் முனாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் கல்விசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை காலத்திற்கேற்ற வகையில் நவீனமயப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த Online Transport Management System அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :