இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்காக இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் இன்று சவூதி அரேபியா பயணம்.


எம்.எஸ்.எம்.ஸாகிர்-


2026 ஆம் ஆண்டின் ஹஜ் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கும், இலங்கை யாத்திரிகர்களின் நலன்புரிகளை ஆராய்வதற்குமாக மத மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்கள் உள்ளிட்ட இலங்கை ஹஜ் தூதுக்குழுவினர் இன்று (மே 23) சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள கிங் அப்துல்அஸீஸ் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர் நீதியரசர் எம். ரீ. முஹம்மத் லபார் (Justice M.T Mohamed Laffar) அவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் மிகவும் அன்போடு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :