கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு



அஸ்லம் எஸ்.மெளலானா-
ல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். இராசன் ஆகியோருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (11) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுர்வேத வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் நிதி உதவியாளர் எஸ். சுபாஷினி, சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிட் நெளசாட் மற்றும் நூலகர் ஏ.எம். முஸ்தாக் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :