அட்டாளைச்சேனை - தைக்காநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைகள் அறுவைத் தளம் தற்போது யாருமே கவனிப்பாரற்ற நிலைமையிலும், அக்கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கதவுகள் முற்றுமுழுதாக சேதமடைந்ததும் காணப்படுகின்றன. அக்கட்டிடம் கடல் பிரதேசத்தை அண்டியுள்ளதால் அதில் பொருத்தியுள்ள இரும்புக் கம்பிகளும் சேதமடைந்தது காணப்படுகின்றது.
இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் அமையப்பெற்ற இக்கட்டிடத்தில் சிறுவர் பூங்கா அல்லது வாசிகசாலை அல்லது கூட்ட மண்டபம் போன்ற தேவைகளுக்காக அதனை மாற்றியமைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்குமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் குறித்த வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.றியாஸிடம் அப்பிரதேச மக்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
அதற்கமைவாக, குறித்த கட்டிடத்தை நேரடியாகச் சென்று அவதானித்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர், பொதுமக்களின் கோரிக்கைக்கமைவாக அதனை மாற்றியமைக்க தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் சபையின் அனுமதியைப் பெற்று அதுதொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment