அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கு மறுதவணை விதிப்பு



பாறுக் ஷிஹான்-

ம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு எதிரான வழக்கு நேற்று முன்தினம்  (11) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கானது புதன்கிழமை(11) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை குறித்த இவ்வழக்கில் சந்தேகநபரான நீதிபதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் வழக்குக் கோவை சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்குத் தொடுனரான பெரியநீலாவணைப் பொலிசார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

இவ் வழக்கானது மீண்டும் 11.03.2026 அன்று சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் அழைக்கப்பட திகதியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :